பக்கம்:இல்லற நெறி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

இல்லற நெறி


சொறிதல்ா அல்லது கீறல்) கிளர்ச்சியினையே அகற்றத் துணை செய்கின்றது. ஆல்ை, காதல்பற்றிய கிளர்ச்சிகட்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு; ஒரு சிறிது நேரம் கிளர்ச்சியும் மறிவினையும் ஒன்றையொன்று வலுப்படுத்தித் தீவிரமாக்கு கின்றன. இறுதி மறிவினையாகிய உச்சநிலை உணர்ச்சி தம்பதிகளின் மூளையில் ஏற்பட்டதும், கிளர்ச்சியின் வன்மை நின்று போகின்றது. அதன் பிறகு இருபாலாரிடமும் ஒரு மகிழ்ச்சியான அமைதி, நிறைவுபெற்ற மனநிலை ஏற்படு கின்றது.

பெண்ணிடம் உண்டாகும் மாற்றங்கள்: இனி, பென் கணிடம் உச்சநிலை உணர்ச்சி ஏற்படுங்கால் உண்டாகும் மாற்றங்களை விளக்குவேன். பெண்களிடமும் இத்த உணிச்சி படிப்படியாகச் சேர்ந்த இ nக்கத்தை விடுவித் தலையே குறிக்கின்றது. இச்சமயம் இதயத் துடிப்புகள், நாடித் துடிப்புகள், பிறப்புறுப்புகளைச் சுற்றிலுமுள்ள பரப்பும் அடிவயிற்றின் கீழ்ப்பாகமும் சுருங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இச்சுருக்கங்கள் சந்த இயக்கம் போலவும் தன்னிங்ல்பாகவும் நடைபெறுகின்றன; தவிரவும், அவை பெண்ணுறுப்பினைச் சுற்றிலும் உள்ள பகுதிகள், யோனிக்குழல், யோனிலிங்கம் ஆகிய இடங்களி லேயே தீவிரமாக நடைபெறுகின்றன. சில சமயங்களில் உடலிலுள்ள பிற தசைகளிடையேயும் பரவுகின்றன; உச்ச நிலை உணர்ச்சி ஏற்படுங்கால் இப்பகுதிகளில் பொதுவாக வலிப்பு போன்ற அசைவுகளும் தென்படுவதுண்டு. சில பகுதிகளிலுள்ள துடிப்புகள் மிக வன்மையாகவும் தெளி வாகவும் இருப்பதால், சாதாரணமாக இவை நடைபெறு வதைப் பென்னும் அறிகின்ருள் எனினும், இச் சுருக்கங் கள் வலுவற்றும் நிலையற்றும் இருப்பதால், அவை

75. Qs mfö Sáð—Scratching. 76. பெண்ணுறுப்பு-Vulva,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/398&oldid=1285267" இலிருந்து மீள்விக்கப்பட்டது