பக்கம்:இல்லற நெறி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

இல்லற நெறி


தேவைகளுக்கேற்பவும் விருப்பங்களுக்கேற்பவும் பால் யுக்தி. முறைகளை அடிக்கடி மாற்றியும் சோதித்தும் தமக்குப் பொருந் கக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

பெரும்பாலான பெண்களிடம் உணர்ச்சித் துடிப்புகள் யாவும் போனிலிங்கத்திலும் அதனைச் சுற்றியுள்ள இ_த்தி லுமே செறிந்திருப்பதால், அவர்கள் இணைவிழைச்சினல் உச்சநிலை உணர்ச்சியை அடைய முடியாது போயினும், யோனிலிங்கப் பகுதியை நேர் முறையில் துரன்டிவிடுவதால் அந்த உணர்ச்சியைப்பெறமுடிகின்றது. இந்நிலையினையுடைய பெண்ணிடம் தேவையானல் புணரிச்சி நடைபெறும் பொழுதோ, அல்லது தான் உச்சநிஉைணர்ச்சியைஅடிைத்த பிறகோ கணவன் நேர்முறையில் யோனிவிங்கத்தைத் தூண்டுவது மிகவும் இன்றியமையாதது. புணர்ச்சியில் உச்சநிலை உணர்ச்சியை அடைய முடியாத நிலையை வாளா விட்டு விடுவதைவிட இம்முறையில்ை அதனை எய்துவித்து. மனைவியிடம் ஏற்படக்கூடிய மனமுறிவினைத் தடுப்பது மிகவும் சிறந்தது; இன்றியமையாது செய்யப்பெற வேண்டு வது.

மேற்கூறிய முறையை மேற்கொள்வது தவறு அன்று; வேண்டுமென்றே தவருண பாதையில் செல்லுவது என்றும் கருதுதல் வேண்டாம்: நேரிய முறையில் இணைவிழைச்சின் மூலம் பெறும் இன்பத்திற்குப் பதிலாகக் காம இச்சையை விளைவிக்கும் பால் விளையாட்டினை மேற்கொண்டு பெறும் இன்பம் தவறுடையதேயன்றி, நேரிய முறையில் மேற் கொள்ளும் இணைவிழைச்சு இன்பத்தை முற்றுப் பெறச் செய்வதற்கு இம்முறையினே மேற்கொள்வது எவ்விதத்தி லும் தவருகாது; இயல்பிகந்த செயலுமாகாது. இதற்கு மேலும் ஒன்று கூறுவேன்: கணவன் மனைவியரிடையே பால் பொருத்தமும் பால் இணக்கமும் ஏற்படுவதற்கு மேற்கொள் ளும் எத்த விதமான பால் பயிற்சியிலும் தவறில்லை என்பதே பல மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்: இம்முறையில் கலைநுட்பங்களும் கலை மதிப்புகளும் பறிபோகா வண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/450&oldid=1285294" இலிருந்து மீள்விக்கப்பட்டது