பக்கம்:இல்லற நெறி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 457

வதாக, நல்ல மருத்துவரை நாடி குறையின் மூல காரணங் களை அறிதல் வேண்டும்.

நோய்நாடி நோயின் குணம்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 8

என்பது வள்ளுவர் வாக்கன்ருே? இங்ங்ணம் செய்யாமல் * இழந்த இளமையைப் பெறுவதற்கான மருந்து வகைகளை வாங்கி உண்டல் கூடாது. ஆண்மையைக் குறைக்கும் நோய் களைப் போக்கிவிட்டால், ஆண்மை தாகை மீண்டும் எழுந்து விடும். அங்ங்னமே மட்டும் மீறிய உடல் உழைப்பாலும் மன உழைப்பாலும் நேரிடக்கூடிய நரம்புச் சோர்வினையும், போதுமான ஒய்வு, ஊட்ட உணவு வகைகள், நல்ல காற்று போதுமான பொழுது போக்குக் கவர்ச்சிகள் ஆகியவற்ருல் போக்கிக் கொள்ளலாம். இன்னும் உடல்பற்றிய கோளாறு களைத் தக்க ஹார்மோன்களாலும், விட்டமின் உணவுகளா லும், பிறப்புறுப்புப் பாதையில் செய்யும் சிகிச்சையாலும், மின்சாரச் சிகிச்சை முறைகளாலும் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். எனினும், பெரும்பான்மையானவர்களிடம் இவை அதிகப்பயன் அளிப்பதில்லை. அவர்கள் உள மருத்துவ முறைகளை மேற்கொண்டு அம்மருத்துவர் ஆலோசனைப்படி நடந்துகொள்ளல் வேண்டும்.

விரைவாக விந்து வெளியேறுதல் தீவிரமாக இராதிருந் தால், அதனை விடா முயற்சியுடன் மேற்கொள்ளப் பெறும் தற்பயிற்சியாலும் கட்டுப்படுத்துவதாலும் குணப்படுத்தி விடலாம். ஆண்குறியை பெண்குறியில் நுழைத்தவுடன் ஏற்படக்கூடிய உச்சநிலை உணர்ச்சியைத் தடுக்க வேண்டு மாயின், குறியை துழைத்தவுடன் புணர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ளாமல் அமைதியாக இயங்கா நிலையில் இருத்தல் வேண்டும். உடனே விந்து வெளியேறும் நிலை மறைந்ததும் இயக்கத்தைத் தொடங்கி விந்து வெளியேறுவதற்கு முன்

68. குறள்-948 69. s buvo Þst–Self-raining

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/463&oldid=598565" இலிருந்து மீள்விக்கப்பட்டது