பக்கம்:இல்லற நெறி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 48కి

கோனிய செயலாகவோ கருத முடியாது என்றும், அஃது எல்லாப் பிராணிகளும் தம்முடைய பிறப்புறுப்புகளைச் சோதிக்கவும், தூய்மையாக்கவும், செயற்படுத்தவும் மேற் கொள்ளும் ஒருவகை உயிரியல் போக்கின் பகுதி என்றும் கருதுகின்றனர். படிமுறை வளர்ச்சிக் கொள்கைபடிப்ேபடி இது காலப்போக்கில் கற்றலும் பரிசோதித்தலுமான திறன் அதிகரிக்கவே வெளிப்படையாகப் புணர்ச்சியின் குறையை நிரப்பும் செயலாகவோ அல்லது புணர்சிக்குப் பதிலீ டாகவோ வெளிப்படையாகவோ மேற்கொள்ளப் பெறு கின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அண்மைக் காலம்வரை முட்டிமைதுனம் பல்வேறு உடல் உளக் கோளாறுகளே விளைவிக்கின்றது என்று கருதப் பெற்று வந்தது. இன்று அவை யாவும் வெறும் கற்பனையில் எழுந்த அச்சங்கள் என்றும், அவ்வாறு ஏற்படுவதற்கு யாதொரு அறிவியல் அடிப்படையும் இல்லையென்றும் சில மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இத்தீய பழக்கத்தை மேற்கொள்வதால் ஏற்படும் அச்சம், குற்ற மனப்பான்மை, கேவல நிலை போன்ற உணர்ச்சிகளே தீய விளைவுகளுக்குக் காரணம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க, நடைமுறையில் இத்தீய பழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோருடைய நிலையைக் கவனித் தால் அது மிகவும் பரிதாபப்பட வேண்டியதாயுள்ளது! இதைப்பற்றி திரு. வி.க. அவர்களின் கடிந்துரையைப் படித்து உண்மை நிலையை உணர்க*.

நீண்ட நாட்களாக இத்தகைய ஒருதலைக் காம விளை யாட்டில் (!) ஈடுபட இளைஞர்களும் பெண்களும் திரு

81. நெறி கோணிய-Perverse

82. படிமுறை வளர்ச்சி-Evolution

83. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைஎட்டாம் பதிப்பு-பக்கம்(148-152)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/469&oldid=598577" இலிருந்து மீள்விக்கப்பட்டது