பக்கம்:இல்லற நெறி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடில் நலம் 47?

வரும் இக்காலத்தில் அங்கும் இளமை மணம் அதிகமாகத் தலைக்காட்டித் தொடங்கியுள்ளது என்று சொல்லுகின்ற னர். நம் நாட்டிலும் சாரதா சட்டம் போன்ற தடைகளால் பொம்மைக் கல்யாணம் போன்ற இளமை மணங்கள் பெரும்பாலும் நீங்கிவிட்டன. ஆயினும் சிற்றுார் களிலும், செல்வந்தர் குடும்பங்களிலும் மணமக்களுக்கு உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னரே திரு மணம் நடைபெற்று விடுகின்றது. நம் நாட்டைப் பொருத்த ம-டிலும் ஆண்களுக்கு இருப்பத்தொரு வயது நிறைந்த பிறகும், பெண்களுக்குப் பதினெட்டு வயது நிறைந்த பின்னரும் திருமணம் செய்வது சாலச் சிறந்ததாகும். இந்த வயதில் மணமக்களுக்கு ஒரளவு மனப்பக்குவமும் ஏனேய பொறுப்புகளும் வந்துவிட்டன என்றே கருதலாம்.

தம்பதிகளின் வயது வேற்றுமை: பெரும்பாலும் மண மக்களிடையே நான்கு வயது வேற்றுமை இருக்க வேண்டும் என்ற பண்டையோரின் கருத்தினை அப்படியே நாமும் மேற் கொள்வது சாலச் சிறந்ததாகும். புள்ளி விவர ஆராய்ச்சி மூலம் எண்பது சத விகிதம் ஆண்கள் தம்மைவிடச் சில ஆண்டுகள் குறைந்தவயதுப் பெண்களேயே மணப்பதாகவும், பத்து சத விகிதம் அவர்கள் ஒத்த வயதுடைய பெண்களை மனப்பதாகவும் பத்து சதவிகிதம் தம்மைவிட மூத்த பெண் களை மனப்பதாகவும் அறியக்கிடக்கின்றது. இன்னும் சில சமூகங்களில் பல ஆண்டுகள் மூத்த பெண்ணே ஒன்று மறியாப் பாலகனுக்கு மணம் செய்து கொடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. பையனுக்குத் திருமண வயது வருங் கால் பெண் பல குழந்தைகட்குத் தாயாக இருப்பாள்! இத்த கைய பழக்கம் இன்னும் சில சமூகங்களில் வழி வழி வந்து கொண்டே உள்ளது. ஆயினும், பெரும்பாலும் சில ஆண்டுகள் வயதில் குறைவாகவுள்ள பெண்ணை மணந்து கொண்டால்தான் திருமணம் பல்லாற்ருலும் மகிழ்ச்சி யுடையதாக அமையும். இருவருக்கும் இடையே பல ஆண்டுகள் வயது வேற்றுமை இருக்குமாயின், அத்தகைய திருமணங்களை நன்கு யோசித்த பிறகுதான் நிறைவேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/477&oldid=598595" இலிருந்து மீள்விக்கப்பட்டது