பக்கம்:இல்லற நெறி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

இல்லற நெறி


அந்த வயதில் அவர்களிடம் ஏற்படாது. அதற்குப் பல ஆண்டுகள் கழிந்த பின்னரே அப்பொறுப்பு அவர்களை வந் தடைகின்றது. இன்று சில செல்வந்தர் குடும்பங்களில்ஏன்? பல குடும்பங்களில் -பன்னிரன்று வயது முடிந்த பெண்ணுக்கும், பதிறுை வயது முடிந்த ஆணுக்கும் திரு மணம் நடைபெற்று ஒராண்டு முடிவதற்குள் குழந்தைப் பேரம் ஏற்படுவதைக் காண்கின்ருேம் பெரும்பாலும் மன மக்களின் பெற்றேர்களே குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையிலிருப்பதை யும் பார்க்கின்ருேம். திருமணத்திற்குச் செல்வநிலையையும் ஒரளவு கணக்கிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இதல்ை தான் இன்றும் மணமக்களுக்குத் தரும் பரிசம் சீர் முதலிய வற்றைத் தவிர, மணமக்கள் தனிக் குடும்பம் வைத்த பிறகு ஓராண்டு வரை பெண்ணின் பெற்றேர் தம்பதிகளின் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் ஏற்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. மணமக்களிடம் பொருளாதாரப் பொறுப்பு-தாமே பொருளீட்டும் திறன்-இருப்பின் இத்த கைய வழக்கம் ஒன்று-இருக்க வேண்டியதில்லையல்லவா? செல்வந்தர் குடும்பங்களிலும் இத்தகைய வழக்கத்தை வற் புறுத்தும் நிலையும் இருந்து வருகின்றது!

விவசாய நாடுகளில்தான் இளமை மணம்: இளமையில் திருமணம் செய்யும் பழக்கம் பெரும்பாலும் இந்தியா, சீன போன்ற விவசாய நாடுகளில்தான் அதிகமாக இருந்து வருவதாக அறியக் கிடக்கின்றது. இயற்கைவளம் நிறைந்த மக்களிடையே போதுமான சுறுசுறுப்பும் இருப்பதில்லை; வாழ்க்கை வருவாயைப்பற்றிய கவலையும் அதிகமாக இருப்ப தில்லை. தொழிற்சாலைகள் நிறைந்த நாடுகளில் சாதாரண மாகத் திருமணம் செய்யும் சராசரி வயது சற்று அதிக மாகவே உள்ளது. ஒவ்வொருவரும் உழைப்பின் மூலமே வருவாயைப் பெறவேண்டியிருப்பதாலும், பிள்ளைப்பேறு ஏற்பட்டால் வருவாய் போதாது என்ற அச்சம் இருப்ப தாலும், இளமைத் திருமணங்களுக்கு அங்கு அதிக ஆதரவு @ఖిడి): ஆயினும், கருத்தடை முறைகள் அதிகமாகப் பரத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/476&oldid=1285307" இலிருந்து மீள்விக்கப்பட்டது