பக்கம்:இல்லற நெறி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 4臀

பொதுவாகப் பெண்களுக்கு இருபது அல்லது இருபத் தொரு வயதில் பிள்ளைப்பேறு ஏற்படின் நன்று; ஆனல், முதல் பிள்ளைப் பேறு முப்பது வயதிற்குமேல் ஏற்படுதலும் நன்றன்று. ஒரு பெண் பூப்பு எய்துவிடுதலைக்கொண்டு, அவள் இனப்பெருக்கத்திற்கு ஆயத்தமாகிவிட்டாள் என்று கருதுதல் தவறு. பல யாண்டுகள் முன்-குமரப் பருவம் கடந்து நல்ல உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பெற்ற பிறகே குழந்தைப் பேற்றையும் குழந்தை வளர்ப்பையும் அவள் மேற்கொள்வதற்குத் தகுதியுடையவளாகின்ருள். ஆனல், இன்னும் பன்னிரண்டு அல்லது பதின் மூன்று வயதி லேயே பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதை நாம் காணுமல் இல்லை. பூப்பெய்தியதும் திருமணம் செய்துவிடு கின்றனர்; தாம்பத்திய உறவிற்கும் ஏற்பாடு செய்கின்றனர். குழந்தைகளும் வரிசை வரிசையாகப் பிறக்கின்றன! இப் பழக்கம் உயிரியல் அடிப்படையிலும் நன்றன்று; உடலியல் அடிப்படையிலும் சிறிதும் பொருத்தமன் று. பதினெட்டு வயதாவது நிறைவு பெ ருமல் பிள்ளைப்பேறு ஏற்பட்டால் தாயின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பெறும், அங்ங்ன ேம பெண்ணின் பிள்ளைப்பெறுந் திறன் நாற்பது வயதிற்கு மேலும் உள்ளது என்ருலும், வயதுசென்ற பிறகு ஒருபெண் பிள்ளை பெற்றிலும் நவீன மருத்துவ முறைகளில் சிக்கல் களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்றபோதிலும், முதல் குழந்தைப்பேறு பெண்ணின் முப்பதுவயதிற்குமேல் தள்ளிப் போதல் கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து; சமூக தன்மைகளை யொட்டி அறிஞர்களின் கருத்தும் இதுவேயாகும்.

குழந்தைகளின் எண்ணக்கை: ஒரு தம்பதிகள் எத்தனை குழந்தைகள் வரையில் பெறுவது விரும்பத்தக்கது என்றும் வினவி இருந்தாய். இதில் திட்டமான பரிந்துரை தருவது மிகவும் சிரமம்; சாத்தியமுமன்று. இதில் தாய் தந்தையரின் உடல் நலம்-சிறப்பாகத் தாயின் உடல் நலம்- அவர்களின் வயது, அவர்களின் சமூகப் பொருளாதார நிலை, அவர்களின் விருப்பு-வெறுப்புகள் முதலிய பல்வேறு கூறுகள் பங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/479&oldid=598599" இலிருந்து மீள்விக்கப்பட்டது