பக்கம்:இல்லற நெறி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல் நலம் 4ፃ?

பகுதிகருப்பையின்வாயிலிருந்தும், ஒருபகுதியோனிக்குழலின் சுவரிலிருந்தும், ஒருபகுதி யோனிக்குழலின் நுழைவாயிலின் அருகிலுள்ள பர்த்தோலின் சுர்ப்பிகளினின்றும் வெளி வரு கின்றன. இது மிகவும் குறைந்த அளவு இருப்பதால் இதனைப் பெண் கவனிப்பதே இல்லை. மாதவிடாய்க்குச் சற்று முன்னும் பின்னும் இவ்வொழுக்குச் சற்று அதிக மாகவே காணப்பெறும். முட்டை பக்குவமடையும் காலத் தில் சில பெண்களிடம் பசைபோன்ற திரவமும் வெளிப் படுதலுண்டு. இவ்வொழுக்கு தொடர்ந்தும் அதிகமாகவும் காணப்பெறின் அது லூக்கோரியா' என்ற நோய்க்கு அறி குறியாகும்; இது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்கோ அல் லது தொற்றுக்கோ அறிகுறியாதலின் உடனே இதனை மருத் துவரின் கவனத்திற்குக் கொண்டுவருதல் வேண்டும்; மற்று, இது இரகஸ்ய நோய்களுக்கு' அறிகுறியன்று என்பதை யும் நீ அறிதல் வேண்டும். பல்வேறு காரணங்களால் யோ னிக் குழலில் ஒழுக்கு ஏற்படுகின்றது. எடுத்துக்காட் டாக, யோனிக் குழலில் டிரைக்கோமான ஸ் வெஜினலிஸ்? என்ற மிகச் சிறிய ஒற்றையணுவாலாகிய உயிரியின லும், அல்லது மானிலியா' எனப்படும் காளான் வகையைச் சார்ந்த உயிரியினுலும் இவ்வொழுக்கு நேரிடுகின்றது. இந்த உயிரிகள் என்றுமே கலவியதுபவம் இல்லாத பெண்களைப் பாதிக்கும். எங்ங்ணம் இவை யோனிக்குழலினுள் புகுகின் றன என்பதை இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை; எப்படியோ அவை நேராகப் புகுந்திருக்கவேண்டும். அல்லது குடலிலிருந்து தொற்றியிருக்க வேண்டும் என்று கருதப் பெறுகின்றது. யோனிக்குழலிலுள்ள இந்நிலையால் எரிச்சல், அரிப்பு, கலவியின்பொழுது வலி முதவியவை உண்டாக

7. gyrāG&mifluuir—Leukorrhea. 84 ĝ)& Gàiu Ĝp5frūōsōît-Venereal diseses, 9. டிரைக்கோமானஸ் வெஜினுலிஸ்-Trichomonas

vagenalis i 0. Lorr gustestuin-Monilia

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/483&oldid=598610" இலிருந்து மீள்விக்கப்பட்டது