பக்கம்:இல்லற நெறி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 4Ꮽ 3

என்ற இலக்கண விளக்க நூற்பா அமைந்திருப்பதைக் காண்க. மேலும், தலைவனின் பரத்தையிற் பிரிவில் தலைவிக் குப் பூப்பு நிகழின் தலைவன் எவ்வாறு ஒழுகு வான் என்பதைக் குறிப்பிடும்,

பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி

பூப்பின் பிறப்பா டீரறு நாளும்

நீத்தகன் முறைதல் அறத்தா றன்றே." என்ற இறையனர் அகப்பொருள் நூற்பாவின் உரையில் வாயில்களால் தலைவியின் பூப்பினை அறிந்த தலைவன் எவ்வாறு ஒழுகுவான் என்பதை நக்கீரர் இவ்வாறு விளக்கு வர்; ...... பூப்பு உணர்த்தப்பெற்ற தலைமகன், வாயில் களோடுஞ் சென்று, தலைமகளிடத்தாளுய், முந்நாளும் சொற்சேட் கும் N உறைவாளுவது. 'முந்நாளும் சொற் கேட்கும் வழி உறைதற்குக் காரணம் என்ன?’ எனின், தலை மகன் பரத்தையர் மாட்டானுக முன்னின்ற பொருமை உண் டென்று எய்தும், முந்நாளுஞ் சொற்கேட்கும் வழி உறை யவே நீங்கும். நீங்கியபின்றைக் கூடும். ஆகவே, கரு நின்றது மாட்சிமைப்படும். அது நோக்கி உணர்த்தப் பட் டது; அதஞன் அறமெனப்பட்டது. அல்லாவிடில், தலை மகள் மாட்டு ஒரு பொருமை தோன்றும் பரத்தையர் மாட்டு நின்று வந்தானென; அப்டொருமை ஒரு வெகுளியைத் தோற்று விக்கும்; அவ்வெகுளி பெரியதோர் வெம்மையைச் செய்விக்கும்; அவ்வெப்பததினல் கருமாட்சிமைப்படாதாம்: படாதாமாகவே, அறத்தின் வழுவாம் என்பது. அதனன், முந்நாளுஞ் சொற்கேட்கும் வழி உறையல்வேண்டுமென்பது. * ஆப்புப் புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரு நாளும் என்பது துணிவு என்ருர்க்கு முந்நாளுங்கூடி உறையப் படுங் குற்றம் ன்னே எ னின், பூப்புப் புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றில் அழியும்; இரண்டாம் நாள் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்ரு ம நாள் நின்ற கரு குறு வாழ்க்கைத்

26. இறை-கள-நூற், 43,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/499&oldid=598644" இலிருந்து மீள்விக்கப்பட்டது