பக்கம்:இல்லற நெறி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

இல்லற நெறி


மிக்கும் இயல்புடனே திகழும் ஒர் ஆடவர் திருமணத்திற்குக் பின்னரும் அங்ங்ணமே இருப்பதையும், சதா அரித்துப்பிடுங் கும் இயல்புடனே அல்லது எதையும் பொறுக்க முடியாத இயல்புடனே உள்ள ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு அங்ங்ன ே இருப்பதையும் நாம் காணுமல் இல்லை. ஆகவே, தன்னுடைய இயல்புகட்கும் நடத்ததைக் கோலங்கட்கும் ஏற்றவாறு ஒரு பெண்ணை மாற்றி விடலாம் என்று எதிர் பார்க்கும் கணவனும் அங்ங்னமே தன்னு ை ய விருப்பத் திற்கேற்றவாறு திருத்கி விடலாம். அல்லது தன்னுடைய எண்ணத்திற்கேற்றவாறு தன் கணவனை மாற்றி விடலாம் என்று கருதும் மனைவியும் மிக அதிகமான ஏமாற்றத்தையே அடைதல் கூடும் என்பதை அறிவாயாக. எனவே, கணவன் மனைவியரின் ஆளுமைக் கூறுகள், அவர்களுடைய மனநிலை கள், அவர்களுடைய முகிர்ச்சி ஆகியவையே திருமணத்தில் மகிழ்ச்சியைத் தரக் கூடியனவாகும் தம்பதிகளின் தன்மை களே திருமணத்தின் தன்மையை அறுதியிடுகின்றன.

உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சி: ஆளுமைக்கூறுகளில் மிகவும் முக்கி பமானது உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சி என்பது. சரியான அளவு ஏற்படும் வளர்ச்சியே முதிர்ச்சியாகும். உடல்நிலை யிலும் உளநிலையிலும், உள்ளக்கிளர்ச்சி நிலையிலும் ஒரு குழந்தை முதிர்ச்சி அடையவில்லை என்பதை நீ அறிவாய். ஒரு குழந்தையால் நடக்கமுடிவதில்லை; தன்னுடையதேவை கட்கும்,ஆதரவுக்கும் வழிகாட்டப் பெறுவதற்கும் குழந்தை பிறரையே சார்ந்துள்ளது அங்ங்னமே, ஒரு குழந்தை காரண காரிய முறையில் சிந்திக்க முடியாத நிலையிலுள்ளது; தன்னுடைய பேசிசிலும் செயலிலும் சரியான கட்டுப்பா டின்றியும் உள்ளது. வயது ஆக ஆக குழந்தை உடல் வன் மையைப் பெறுகின்றது; நடப்பதற்குப் பிறருடைய ஆதரவு தேவையில்லை; அதிகமான அறிவுத்திறனையும் அதிகமான உள் ளக்கிளர்ச்சியையும் பெறுகின்றது. அஃதாவது, உடல் கட் டுப்பாட்டுடனும் உள்ளக்கிளர்ச்சிக் கட்டுப்பாடுடனும் வினை புரியவும் எதிர்வினைபுரியவும் தேவையான திறனை அடிைகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/544&oldid=1285341" இலிருந்து மீள்விக்கப்பட்டது