பக்கம்:இல்லற நெறி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

இல்லற நெறி


நாம் வளர வளர முன்நோக்கும் வளர்ச்சி பன டகின்றது. வாழ்க்கையின் உண்மைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் நம்முடைய செயல்களின் முடிவுகளை முன்னதாகவே எதிர் பார்க்கவும் கற்றுக் கொள்ளுகின்ருேம்: நம்முடைய நடத்தையின் உத்தேசமான விளைவுகள் என்னவாகும் என்பதை முன்னதாக அறுதியிடவும் நம்மால் முடிகின்றது. நம்முடைய சிந்த”னயிலும் செயலிலும் நம்முடைய விருப் பங்களே ஆக்கிரமிக்க நாம் அனுமதிப்பதில்லை; விருப்பங் களைக் கட்டுப்படுத்தி ஆளும் திறன் நமக்குக் கைவருகின்றது. சுருங்கக்கூறின் நம்முடைய அறிவுக்கூறு புலன் உணர்ச்சி', புலன் காட்சி கருத்து , நினைவு? சிந்தனை’’ ஆகியவற் றின் மூலம் தலங்கி33 வளருகின்றது.

உள்ளக்கிளர்ச்சியைப் பொறுத்தவரையில் முதிர்ச்சி யடைந்த மனிதனிடம் விடுதலையுணர்ச்சியும் அமைகின்றது. நாம் வளர்ந்ததும் நம்மையே நாம் கவனித்துக் கொள்ளும் திறனை அடைகின்ருேம்; எச்செயலிலும் நாமே நமது முடிவுகளையும் தீர்மானங்களையும் செய்கின்ருேம். ஒருவரைச் சார்ந்துள்ள மனிதனிடம் பாதுகாப்பு இல்லை; அவனுடைய திறன்களில் அவனுக்கே நம்பிக்கை குறைவாகவுள்ளது. ஆகவே, அவன் அனைத்திற்கும் பிறரையே தொங்க வேண்டி யுள்ளது; அவன் ஆதரவிற்கும் பாதுகாப்பிற்கும் பிறரையே நாடுகின்ருன் முதிர்ச்சியடைந்தவன் தன்னையே சார்ந்துள் ளான்; தன் நடத்தைக்குத்தானே பொறுப்பாளியாகின்றன். அவன் பதிற்கனவுகளையோ வானக்கோட்டைகளை அமைப் பதையோ அல்லது மயக்கம் தரும் பானங்களையோ மேற் கொள்ளுவதில்லை.

18. Ljaj or 2.6R, if oğl—Sensation, 19. Hovsår off Léo-Perception. 20. 53533–Concept. B1. ore-Memory. 22, §§ 5%r-Thinking. 83; goo-Develop.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/546&oldid=1285342" இலிருந்து மீள்விக்கப்பட்டது