பக்கம்:இல்லற நெறி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 551

இந்த மூன்று தொகுதிகளடங்கிய கூறுகளு ம் எண்ணற்ற முறைகளில் எதிர்வின புரிந்து திருமண த்தின் சிறப்பினைப் பல்வேறு முறைகளில் உயர்வாக்ககின்றன. வாழ்க்கை விரிய விரிய இவற்றை இளம் தம்பதிகள் நன்கு அறிவர்: தெளிவாகப் புரிந்துகொள்வர்.

சில சோதனைகள் : அண்மையில் பல திறமையான ஆராய்ச்சியாளர்கள், திருமண வெற்றிக்கான எக்கூறுகள் தம்பதிகளிடையே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை அறுதியிட பல சோதனைகளே ஆயத்தம்செய்ய முனைந்தனர். முதலில் அவர்கள் திருமணங்களை அறுதியிடும் (rating ஒப்பளவுக் கூறுகளைக் கண்டனர்; அதன் பிறகு கணவன் மனைவியர் வளர்ந்த சூழ்நிலை, அவர்களது ஆளுமை பற்றிய ஏராளமான தகவல்களைச் சேகரித்தனர்; இந்த இரண்டு ஆராய்ச்சி முடிவுகளையும் தம்பதிகளின் திருமண வெற்றி அளவுடன் பொருத்திப் பார்த்தனர். இந்த ஆராய்ச்சியில் அவர்கள் தம்பதிகள் வாழ்ந்த சூழ்நிலைகள், அவர்களது வயதுகள், கல்வி, தொழில், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அறிமுகமான கால அளவு, அவர்களது உடல்நல நிலை, சமயம், பால், குழவிகள் இவைபற்றி அவர்களது மனப்பான்மைகள் போன்ற கூறுகளையும் அவர்களது ஆளு மைக் கூறுகளையும் அவர்கள் கவனித்து ஆய்ந்தனர். இந்தக் கூறுகளின் அடிப்படையில் அவர்கள், எக்கூறுகள் திருமண வெற்றிக்கு உகந்தவை, எவை ஒவ்வாதவை என்பதைக் காண முயன்றனர்.

இந்த ஆராய்ச்சிகள் யாவும் நம்முடைய கவனத்திற்கு உரியவை. இந்த ஆராய்ச்சிகளைக்கொண்டே அன்றைய நிலையில் திருமணத்தின் வளர்ச்சியினை ஒரளவு முன்னரே அறிந்து கூறலாம் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆயினும், சில அறிஞர்கள் இச் சோதனைகள் இன்னும் சோதனை நிலை யிலேயே, இருப்பதாகக் கருதுகின்றனர் இச் சோதனை களைக் கொண்டு ஒரு தனியாள் உள்ள குழுவினைப்பற்றிய சில முடிவுகளை அறுதியிடலாமேயன்றி அத் தனிடாளைப்

27. ஒப்பளவுக் கூறுகள்-Criteria.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/557&oldid=598774" இலிருந்து மீள்விக்கப்பட்டது