பக்கம்:இல்லற நெறி.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550

இல்லற நெறி


மேசை, முகம் பார்க்கும் கண்ணுடி, துணிமணிகள் ஆகிய வற்றை வாங்குவதற்கும் மகளைக் கணவனுடன் தனியாக விடுவதில்லை. அனைத்திலும் தலையிட விரும்புகின்றனர். இளம் பிராயத்திலுள்ள அவர்கட்கு ஒன்றுந்தெரியாது என்று கருதுகின்றனர். மருமகன் இதனை விரும்பாவிடினும் இத்தலையிடு நடைபெற்றுதான் வருகின்றது! இதுவே சில சமயம் திருமணமுரண்பாடுகட்கும் காரணமாகின்றது.

திருமணம் ஆனதும் தம்பதிகள் தனிக்குடும்பம் வைத்து வாழ்வதுதான் சிறந்தது. பண்டைக் காலத்தில் தமிழர் வாழ்வில் இம்முறைதான் இருந்து வந்தது. இன்று திருமணம் ஆனதும் தம்பதிகள் சில குடும்பங்களில் மனைவி யின் பெற்றேருடனே (இது மிகக்குறைவு) கணவனின் பெற்ருேருடனே.சேர்ந்து வாழ்ந்து வரும் பழக்கம் இருந்து வருகின்றது. சிலருக்கு இம்முறை பொருந்துமாயினும், பலருக்கு இது பொருந்தாது. இம்முறையினுல் தம்பதி களின் ஆளுமை வளர்ச்சி குன்றி வடுகின்றது. பொறுப்பு களே ஏற்று நடத்தும் வாய்ப்புகளே இல்லாது போகின்றது. தனியாக வாழ்வதில் எத்தனையோ தன்மைகள் ஏற்படுகின்றன.

வெற்றிக்குரிய கூறுகள் : திருமணம் வெற்றியாக வேண்டுமாயின் அது மூன்று முக்கிய கூறுகளைப் பொறுத் துள்ளது. என்பதை திருமண முரண்பாடுகளைப் பற்றி ஆராய்ந்தபோது கூறினேன். அவற்றுள் ஒன்று: தம்பதி களின் ஆளுமைக் கூறுகள், அவர்களது உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சி, அவர்களது சமநிலை, உறுதி ஆகியவை அடங்கிய தொகுதியாகும். மற்ருென்று: தம்பதிகள் இருவரும் இணங்கிப்போகும் அளவு, அவர்களது ஒத்த கவர்ச்சிகள், வாழ்வின் போக்குகள் ஆகியவையும்; நட்பிற்கும் அன்பிற் கும், பாலுறவு திருப்திக்கும், குடும்பத்தை நடத்துவதற் கும் அவர்களிடம் அமைந்துள்ள அடிப்படைத் தேவைகளும் அடங்கிய தொகுதியாகும். இன்னென்று; பொருளாதாரப் பாதுகாப்பு, சமூகப் பொருத்தப்பாடுகள், திருப்தியான குடும்ப உறவுகள் ஆகியவை அடங்கிய தொகுதியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/556&oldid=1285347" இலிருந்து மீள்விக்கப்பட்டது