பக்கம்:இல்லற நெறி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 55g

குறைந்துவிடும் என்று சொல்லத் தேவை இல்லை. முதிர்ந்த அன்பில் ஒருவர் மற்றவரது நலனைநாடுவதில் உண்மையான பண்பு அமைந்திருக்கும். அஃது ஆன்மநேய உறவாகும். அது முன்னெரு கடிதத்தில் தோழியின் ஒம்படைக்கிளவி யாகக் குறிப்பிட்ட நற்றிணைப் பாடலில் கண்ட உணர்ச்சி யைப் போன்ற பண்பாகும்.

இக்கால இளைஞர்களும் இளம் பெண்களும் காதலைத் தவருக உணர்ந்தவருகின்றனர். அவர்கள் உடலின்பம்தான் காதல் என்று திரிபுணர்வு பெறுகின்றனர். அன்ருடம் செய்தித்தாள்களிலும் பருவ இதழ்களிலும் வெளியாகும் கதைகளைப் படிப்பதனலும், மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள காதல் பாட்டினை அடிக்கடிக் கேட் தானுலும், நாடக நாட் டிம் பேசும் படங்கள் ஆகிய கேளிக்கைகளைம் அடிக்கடி காண்பதாலும் இத்தவருண உணர்வு அவர்களி டம் ஆழ்ந்து பதிகின்றது. கானலை நீர் என்று நம்பும்போக்கு அவர்களிடம் நிலைபெறத் தொடங்குகின்றது. சிலர் நிழற் படத்தில் காணும் நடையுடை பாவனைகளையுடைய பெண் னைப் போன்ற ஒருத்தி தனக்கு மனைவியாக வாய்க்க வேண் டும் என்றும் பித்தேறி மலைவுறுகின்றதையும் நாம் காணுமல் இல்லை. ஆனல் பெண்மக்களிடம் இத்தகைய மயக்க உணர்வு அதிகமாக ல்லை.

ஆகவே, நம் நாட்டுப் பண்பாட்டைப் பொறுத்தமட்டி லும் திருமண உறவுக்குத் தம்பதிகளிடம் காணப்பெறும் சாதல் மட்டிலும் போதாது. அவர்களிடம் பல்வேறு ஒத்த கவர்ச்சிகள், ஒத்த அநுபவங்கள். ஒத்த மனப்பான்மை கள், ஒத்த மதிப்பீடுகள் ஒத்த கருத்துகள், ஒத்த குறிக் கோள்கள் முதலியவை அமைந்திருத்தல் வேண்டும். ஒரு வர் மற்றவரது சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் மதிப்பு தருதல் வேண்டும். பொது வாழ்வில் இருவரும் பல்லாற்ருனும்

35. இந்நூல்-பக்கம். 354

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/565&oldid=598792" இலிருந்து மீள்விக்கப்பட்டது