இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
570
இல்லற நெறி
யிலும் விளக்கினேன். திருமண வாழ்க்கையில் புகும்நிலை யிலுள்ள உனக்கு இவை பெரிதும் பயன்படும் என்பது என் நம்பிக்கை. வாழ்க்கை நெடுந்தொலைவு உடையது; அதன் நீள, அகல, ஆழங்களைக் காணமுடியாது. இத்தகைய வாழ்க் கைக் க.வில் பிரயாணம் செய்யும் மணமக்களுக்கு இக் கடிதங்கள் மாலுமியாகவும் திசைகாட்டியாகவும் அமைதல் கூடும் என்றும் கருதுகின்றேன்.
அன்புள்ள,
திருவேங்கடத்தான்.