உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



 நன்றியுரை

காந்தியடிகள் காட்டிய அறநெறி நின்று தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாகக் கல்வி, சமூகம், மருத்துவம் என்ற முத்துறைகளிலும் தொண்டாற்றிப் பெரும் புகழ்பெற்ற தமிழ்ப் பெருமகள் டாக்டர் டி. எஸ். செளந்திரம் இராமச் சந்திரன் அவர்கள். இன்று தமிழகத்தில் மதுரை மாவட்டத் தில் காந்தி கிராமத்திலுள்ள கல்வி நிலையங்கள் யாவும் அம்மையாரின் சீரிய பணியை எடுத்துரைக்கும் சான்று களாகும். இவரது அடக்கமான பணியை அறிந்த மைய அரசு இவருக்குப் பொருத்தமான கல்வித் துறையில் துணை-அமைச்சர் பொறுப்பை வழங்கிப் பெருமைப்படுத்தியது. இன்று கல்வித்துறை அமைச்சில் மணிவிளக்கு போல் அணிசெய்யும் அம்மையார் அவர்கள் இந்நூ லுக்கு முன்னுரையை வழங்கி ஆகி கூறினமைக்கு என் உளங்கனிந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியவை.

     திருப்பதி,             ந.சுப்பு  ரெட்டியார்
     14- 12 - 1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/6&oldid=1672737" இலிருந்து மீள்விக்கப்பட்டது