பக்கம்:இல்லற நெறி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இல்லற நெறி


பெற்றேர்களால் தம் குழவிகட்குக் கடத்தப் பெறலாம். ஆல்ை, அந்நிலை தம் குழவிகளிடமும் வளரும் என்பது பின்னர் ஏற்படும் சூழ்நிலைக் கூறுகளைப் பொறுத்ததாகும். திப்பேற்றின் காரணமாக, சாதாரணமாக நல்ல உடல் நிலையுடனிருக்கும் ஒருவரிடமும் குறைபாடான ஜீன்கள் இருக்க ஏதுவுண்டு. தவிட்டு நிறக் கண்களையுடைய பெற் ருேர்கட்கு நீல நிறக் கண்களையுடைய குழவிகள் பிறந்ததை மேலே குறிப்பிட்டோமல்லவா? இந்நிலை வேறு சிறப்பியல்பு களுக்கும் பொருந்தும். நன்னிலையிலுள்ள மக்களிடம் குறை பாடான ஜீன்கள் இருப்பதும் அவை தம்முடைய மரபுவழி யினருக்கு இறங்குவதும் இனமேம்பாட்டியலின் அடிப்படைப் பிரச்சினைகளுள் ஒன்ருக இருந்துவருகின்றது. சாதாரணமாக நன்னிலையிலுள்ள ஒருவரிடம் மறைந்துள்ள குறையை அறுதி யிடக்கூடிய திட்டமான முறை யாதொன்றும் இல்லை. பொதுவாக ஒரு தம்பதிகளிடம் எந்தவிதமான கடுமையான இயல்பிகந்த தன்மையும் இல்லாதிருந்து, அவர்களுடைய குடும்பத்திலும் மரபுவழியாக இறங்கும் எந்தவித நோய் களைக் காட்டக்கூடிய பதிவேடும் இல்லாதிருந்தால், அவர் கட்கு நல்ல குழவிகளே பிறக்கும் என்று கருதலாம்: அவர்கள் இருவரும் நன்னிலையிலிருந்து, அவர்களது ஒருவ ருடைய குடும்ப வரலாற்றில் நோய் இருப்பதாகத் தெரிந் தால், அந்நோய் சந்ததியினக்கு இறங்குவது நோயின்வகை, அது மரபுவழியாக இறங்கும் முறை, அந்நோயால் தாக்குண்ட அண்மைக்கால உறவினர்களின் எண்ணிக்கை வேறு பல காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். இருமல் நோய்' என்ன என்பதை நீ அறிவாய். முதலில் இந்நோய் மரபுவழியாக இறங்கும் ஒரு நோயாகக் கருதப்பெற்றது. பின்னர் இஃது ஒருவகைக் கிருமிகளால் (Tubercle bacillus) உண்டாகின்றது என்று கண்டறியப் பெற்றது. இந்நோய் பெரும்பாலும் வறுமை நிலையிலுள்ள வர்கள், சுகாதார வசதிக் குறைவுள்ள இடங்களில் வாழ்ப

86. Goju,é Girij-Tuberciosis.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/68&oldid=1285109" இலிருந்து மீள்விக்கப்பட்டது