பக்கம்:இல்லற நெறி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல முகம

வரங்கொண்ட வுமைமுலைப்பால்

மனங்கொண்ட செவ்வாயும் பரங்கொண்ட களிமயிலும்

பன்னிரண்டு கன்மலரும் சிரங்கொண்ட மறையிறைஞ்சும் சேவடியும் செந்துாரன் கரங்கொண்ட வேலும் என்றன் கன்ணைவிட்டு நீங்காவே.

-சுவாமிநாத தேசிகர்

இம்மண்ணுலகில் தோன்றிய ஒவ்வொருவடைய வாழ்க்கையிலும் பிறப்பு, திருமணம் இறப்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் மிகப் பெரியவை; சிறப்புடன் குறிப்பிடத் தக்கவை. இவை மூன்றும் முறையே ஒருவரது வாழ்வின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதிக்ளில் நடைபெறும் நிக்ழ்ச்சி களாகும். உலகிலுள்ள எல்லாச் சமூகங்களும் இம்மூன்றற் கும் முக்கியத்துவம் அளித்துள்ளன. இம்மூன்றிலும் நடு நாயகமாக அமைந்துள்ள திருமணமே மக்கள்ன் கவனத் தைக் கவர்ந்துள்ளது; நாகரிகம் அடைந்த எல்லா மக்களும் இதனைக் கருத்துடன் கவனித்துப் பல கட்டுப்பாடுகளே அமைத்துள்ளனர். இதற்குக் காரணம் என்ன? காரணம் மிகவும் வெளிப்படை. திருமணம் என்பது தனிப்பட் டோரின் உடல் பற்றியதும், உளம் பற்றியதும், உள்ளக் கிளர்ச்சி பற்றியதும், ஆன்மிக உறவுபற்றியதுமான முதிர்ச்சியினைக் காட்டும் சமூகச் சான்ருகும். அஃது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒர் இளைஞனைக் கணவன்-தந்தை யாகவும் .ஒரு யுவதியை மனைவி.தாயாகவும் மாற்றுகின்றது. இந்நிலையில் அது அவர்கட்குச் சமூகத்தில் ஒர் உயரிய நிலை யையும், கடமைகளையும் உரிமைகளையும் பொறுப்புகளையும்

1. திருச்செந்திற் கலம்பகம்-செய். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/9&oldid=598932" இலிருந்து மீள்விக்கப்பட்டது