பக்கம்:இல்லற நெறி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் §§

உச்சநிலை உணர்ச்சிகிளர்ந்தெழுங்கால், தானுக நடைபெறும் செயல்முறையும் அதிகரிக்கின்றது. அந்த நிலையிலிருந்து நடைபெறும் செயல்கள் யாவும் முயற்சியின்றியே! நடை பெறுகின்றன. சுரப்பிகளும் விந்துத் துரம்புகளும் சுருங்கிப் பாய்மங்களைப் புராஸ்டேட் சிறுநீர்ப்புறவழியை நோக்கித் தள்ளுகின்றன. உடனே சிறுநீர்ப் புறவழியும் தொடர்ந்தாற் போல் தாள இயக்கம் போன்ற சுருக்கங்களால் விந்துவை வெளிப்படுத்துகின்றது. இச்செயல் நடைபெறுங்கால் சிறு நீர்ப் பையின் அடிப்புறத்திலுள்ளமடக்குத்தசை இறுக்கமாக மூடப் பெறுகின்றது. புணர்ச்சித் துடிப்பு ஒரளவு ஏற்பட்ட நிலையில்-உச்சநிலை யுணர்ச்சியும் விந்து வெளிப்படுதலும் நிகழ்வதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பிருந்தே-சிறுநீர்க் கழிப்பது சிரமமாக இருப்பதிலிருந்து இதை நன்கு அறிய லாம்.

இவ்விடத்தில் இன்னெரு முக்கிய செய்தியையும் கூற விரும்புகின்றேன்.புராஸ்டேட்சுரப்பிக்கு நேரிடும் கோளாறு கள் சிறுநீரடைப்பிலும் கொண்டுசெலுத்துகின்றன. சிறு நீர்ப்பையின் அடிப்பகுதியில், அதன்வாயருகில், இவ்வுறுப்பு அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும். வெள்ளைநோய்த் தொற்றினைச் சரியான காலத்தில் சிகிச்சை செய்யாதுவிட்டு விட்டால் சிறுநீர்ப் புறவழியின் கீழ்ப் பகுதியைப் பாதித் திருக்கும் நோய் மேனுேக்கிச்சென்று புராஸ்டேட்சுரப்பியை யும் தாக்குகின்றது. வேறு காரணங்களாலும் இச்சுரப்பி நோயுறுகின்றது. சில சமயம் சிலருக்கு நடுவயதில்-கிட்டத் தட்ட 50 வயதில்-இச்சுரப்பி பெரிதாக வளர்ந்து நீரடைப் பினை விளைவித்தல் கூடும். இந்நிலை முற்றில்ை இச்சுரப்பியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியும் நேரிடலாம். புராஸ்டேட் கோளாறுள்ளவர்களிடம் விந்தணுக்கள் தம் ஊட்டத்தை இழக்கும். ஆனால், அஃது அவரிடம் இனப் பெருக்க ஆற்றலைக் குறைக்காது. புராஸ்டேட் சுரப்பியை

40. Gpu þSA—Volition.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/95&oldid=598944" இலிருந்து மீள்விக்கப்பட்டது