பக்கம்:இல்லற நெறி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இல்லற நெறி


உறுப்பு என்பது படம்-6 ஐயும் படம்-9 ஐயும் உற்று நோக் கினல் அறியலாகும். இந்தச் சுரப்பியின் மேலிருந்து கீழ் வரை சிறுநீர்ப் புறவழி துளைத்துச் செல்லுகின்றது. இப் பகுதியில்தான் விந்துவை வெளியேற்றும் தூம்புகள் அமைந் துள்ளன. விந்து வெளிப்படுங்கால் உடன் தோன்றுகின்ற இன்ப உணர்ச்சி இப்பகுதியில்தான் உள்ளது என்று பொது வாக ஒப்புக்கொள்ளப் பெற்றுள்ள ஓர் உண்மையாகும்: புணர்ச்சியின்பொழுது உச்ச நிலை உணர்ச்சியுடன் விந்து வெளிப்படும் நிலையில் இச் சுரப்பி சுருங்கி மெல்லியதான பால் போன்ற சுரப்பு நீரைப் பாய்ச்சுகின்றது. இச்சுரப்பு நீர் தொடர்ச்சியாகவுள்ள மிக நுண்ணிய சிறு குழல்கள் மூலம் மிகச் சிறு துளிகளாக அனுப்பப் பெறுகின்றன். இச் சுரப்பு நீரின் பயன் இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை. விரை யினின்று வெளிப்பட்டவுடன் விரைவாக அசைந்துசெல்லும் ஆற்றலைப் பெருத விந்தணுக்கள் இந்த நீருடன் சேர்ந்த பிறகே அந்த ஆற்றலை அடைகின்றன. வெளிப்படும் பசை போன்ற விந்து சற்று நீர்போலாக்குவதற்கும் இந்நீர் துணை புரிவதுடன் விந்துப் பாய்மத்திற்குப் பிரத்தியேகமான ஒரு மணத்தையும் நல்குகின்றது. இந்நீர் காரத் தன்மை புடையது.

விந்துப் பாய்மம்; எனவே, புணர்ச்சியில் வெளிப்படும் விந்துவானது பல சுரப்பிகளினின்றும் வெளிப்படும் சுரப்பு நீர்களின் தொகுதியாகும். இந்தச் சுரப்பு நீர்த் தொகுதியில் தான் விந்தணுக்கள் கலந்து வெளிப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுங்கர்ல் சிறுநீர்ப் புறவழியின் குமிழின் அருகிலுள்ள கெளதுர்-சுரப்பியின் நீரும் இத்துடன் கலக்கின்றது. இவ் வாறு விந்து வெளிப்படுவதில் பங்கு கொள்ளும் பொறி நுட் பம் மிகவும் சிக்கலானது. புணர்ச்சியின்பொழுது ஏற்படும்

37. Qasigubuwih stihusisir–Ejaculatory ducts. 38. உச்சநிலை உணர்ச்சி-Orgasm. 39. Ggeruf stgih?–Cowper's Illand,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/94&oldid=1285122" இலிருந்து மீள்விக்கப்பட்டது