உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

கட ன்கள் இவையாம். மற்றையிடங்களில் எரியும் தீயை ஆற்றல் 'அணைத்தலாம்." “தீயணைப்பு” என்பது அறிக.

66

துடைத்தல் - இல்லாது செய்தல்

துடைத்தல் த்தல் என்பது தடவுதல் பொருளைவிடுத்து துடைத்து எடுத்தலைக் குறித்து வழக்கில் உள்ளது. 'தண்ணீரைத் துடை என்றால் ஈரப்பதமும் இல்லாமல் ஆக்கலைக் குறித்தல் தெளிவு. “அவன் சாப்பிட்டால் பானையைத் துடைத்து அல்லது கழுவி வைத்து விட வேண்டியதுதான்” என்பதில் முழுவதும் தீர்த்து விடுதல் என்னும் பொருளில் துடைத்தல் ஆளப்படுதல் வெளிப்படை. திருடன் வந்து வீட்டைத் துடைத்து வைத்தது போல் ஆக்கிவிட்டான் என்பதும், உன்னை ஒரு நாள் கடையில் வைத்தால் போதும் துடைத்து வைத்தது போலத்தான் என்பதும் மொத்தமாக இல்லாது ஆக்கிவிடும் பொருளவாம்.

துணியைத் தாண்டல் - உறுதி மொழிதல்

மெய்கூறல் (சத்தியம் செய்தல்) என்பதன் முறைகளுள் ஒன்று று துணியைத் தாண்டல், பிள்ளையைப் போட்டுத் தாண்டலும் லும் இத்தகைத்தே. பிள்ளையைப் போட்டுத் தாண்ட லாகக் கருதப்படும் உறுதியே துணியைப் போட்டுத் தாண்டலு மாம். 'துணி' மானப் பொருள். அதனை எடுத்துப் போட்டுத் தாண்டல் மானத்தின் அடையாளம் எனப்பட்டதாம்.

"நான் சொல்வது பொய் என்றால் இத் தாண்டு பிள்ளை ஐயோ என்று போய்விடும்” என்பதுபோல, நான் சொல்வது பொய் என்றால் கட்டத் துணியில்லாமல் போய்விடும் என உறுதி மொழிவது இவ்வழக்கின் பொருளாம். துணி கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.

துணியைக் கிழித்தல் - கிறுக்காதல்

66

“சீலையைக் கிழித்தல்” என்னும் வழக்குப் போல்வது. துணி என்பது துண்டித்தல் என்னும் பொருளில் வருவது எனினும், அதனை முழுமையான சீலை, வேட்டி, துண்டு என்னும் பொருளாகக் கொண்டு அதனைக் கிழித்தலைக் குறித்ததாம். “நான் என்ன துணியைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன்’ என்பதில் “நான் கிறுக்கா?” என்னும் வினாவுண்மை காண்க. துருவல் - தேடல், ஆராய்தல்

66

وو

துருவுதல் நுண்ணிதாகத் துளைத்தல் பொருளது. தேங்காய் துருவுதல், துரப்பணம் செய்தல், துரவு (கிணறு) என்பவற்றை