உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கின்

வழக்குச் சொல் அகராதி நுணுக்கமாகத்

துளைத்தல்

103

பொருள

தென்பது துலங்கும். இந்நுணுக்கத் துளைப்பு அடர்காட்டின் ஊடுநோக்கிப் பார்க்கும் பார்வைக்கும், பருப்பொருளின் ஊடே நுணுகியாராயும் ஆய்வுக்கும் பொருளாதல் வழக்காயிற்றாம். “எதையும் மேலாகப் பாராமல் துருவித் துருவிப் பார்ப்பான் என்பதில் இப்பொருள் விளக்கமாம்.

தூசிதட்டல் - விலைபோகாதிருத்தல்

ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசி தட்டல். காலையில் கடைதிறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தலும், பெருக்குதலும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத் தட்டலுமே வேலை; விற்கும் வேலை இல்லை என்பதைக் குறிப்பது தூசி தட்டல் சி

நாள்தோறும் தூசி தட்டிக் கொண்டிருக்குமாறு நேர்வது எப்படி? பழைய பொருள்கள் போகவில்லை; புதுப்பொருள்கள் வரவில்லை என்பதே பொருள். ஆதலால் விற்பனை இல்லை வேலை மட்டும் தீராத வேலை என்பதே குறிப்பாம்.

தூண்டில் போடல் - சிக்கவைத்தல்

தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக் கவர்வதும் சிக்க வைப்பதும் தூண்டில் போடலாகச் சொல்லப்படுகிறதாம். ‘வலைபோடுதல்' ‘வலைவீசுதல்' என்பனவும் இப்பொருளவே.

தூர்த்து மெழுகல் - ஒன்றும் இல்லாது அழித்தல்

-

-

தூர்த்தல் பெருக்குதல்; மெழுகல் துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து மெழுகப்பட்ட இடத்தில் ஒரு சிறு தூசியும் தும்பும் கூட இல்லாமல்போகும் அல்லவா; அவ்வாறு எந்த ஒன்றும் எந்த ஒன்றும் இல்லாமல் இல்லாமல் வெறுமையாக்குவது தூர்த்து மெழுகலாக வழங்குகின்றதாம். “ஒரு வாரம் வீட்டில் இருந்தான்(ள்) தூர்த்து மெழுகி விட்டுப் போய் விட்டான்(ள்)” என்பது இப்பொருளை விளக்கும்.

தெரிப்பெடுத்தல் - கண்டுபிடித்தல்

ஒரு பொருள் களவு போய்விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்து காணலும் நாட்டுப்புறத்தில்