உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

111

உனக்கு வாய் நீண்டுவிட்டது என்பது வாய் என்பது நாவைக் குறித்து நாவு பேச்சைக் குறித்து வந்ததாம். “உனக்கு நாக்கு நீளம்” என்பதும் இப்பொருளதே.

நீட்டிக் குறைத்தல் - தந்து நிறுத்துதல்

நீட்டிக் குறைக்க நெடும்பகை' என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு குறைத்துக் கொடுத்த நிலையையும் குறித்து வழங்குகின்றது. நீட்டுதல் குறைத்தல் என்பவை தம் சொற்பொருளை விடுத்து வேறு பொருள் தருதலால் வழக்குச் சால்லாயிற்றாம். “நீட்டுதல்” என்பதைப் பார்க்க, கைந் நீட்டலும் காண்க.

நீர்வார்த்தல் - தருவதை உறுதிசெய்தல்

தாரைவார்த்தல் என்பதும் இதுவே. "இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன்” என்பதற்கு அடையாள மாக நீர் வார்த்தல் அல்லது தாரைவார்த்தல் நிகழும். தாரை - நீர், நீண்டு ஓடுதலால் பெற்ற பெயர்.

தார் என்பதும் நீர் என்பதும் ஒன்றே. தார் நீண்டு செல்வது என்னும் பொருளது; நீள்வதால் ‘நீள்' என்பது நீரே. குறள் வடிவில் வந்த திருமாலுக்கு மாவலி மன்னன் தாரை வார்த்த கதையும், குறள் நெடுமாலாக வளர்ந்து நிலமளந்த கதையும் நாடறிந்தது. வேதியச் சடங்கில் திருமணம் முடித்துத் தருதலில் தாரைவார்த்தல் உண்டு. பெண்ணை உன்னிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டேன் என்பதற்குரிய சடங்காக அது நிகழ்த்தப் படுகின்றது. நீர் தொட்டு உறுதி செய்தல், நிலந் தொட்டு உறுதி செய்தல் போல இது நீர் விட்டு உறுதி செய்தலாம்.

து

நூறு நூறு-நூறாண்டு வாழ்க

தும்மல் உண் உண்டானால்

ானால்

அருகில்

ருப்பவர் நூறு

என்றும் ‘நூறு நூறு' என்றும் சொல்வர். 'நூறாண்டு வாழ்க என்பதே வாழ்த்துப் பொருளாம். நூறாண்டு நூறாண்டு என்ப தன் அடுக்கே நூறுநூறு என்பதாம். இருநூறு காண்க.

நெட்டியைப் பிடித்தல் - ஏவுதல், கடினமான வேலை

நெட்டியாவது பிடர். குப்புற வீழ்த்த நினைவார், பிடரைப் பிடித்துத் தள்ளுவர். அவ்வழக்கம் பிடர் பிடித்துத் தள்ளாமலே,