உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம்

1

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்கு வந்தது. வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்ய ஏவுதலே நெட்டியைப் பிடித்தலாகச் சொல்லப் படும். இனித் தாங்க இயலாச் சுமையைத் தலையில் வைத்துச் சுமப்பவர் தம் கழுத்தைப் பிடித்து விடுவது வழக்கு. அதுபோல் கடினமான வேலையில் ஈடுபட்டிருப்பவர் நெட்டியைப் பிடிக்கிறது என்றும், நெட்டியைப் பிதுக்குகிறது என்றும் கூறுவது உண்டு. நெடுங்கை - தாராளக்கை

நெடியகை என்பது நீண்டகை என்பதைக் குறியாமல் தாராளமாக அள்ளித் தரும் கை, மிகச் செலவு செய்யும் கை என்னும் பொருளில் வரும்போது வழக்குச் சொல்லாம்.

66

66

وو

66

'அவளுக்கு நெடுங்கை. ஒரு மாதச் செலவுக்கு இருந்ததை ஒரு நாளையில் தீர்த்து விடுவாள்; 'ஆறுநாள் அரைவைச் சலவு அவளுக்கு ஒரு நாளுக்குப்போதாது; அவள் கை அவ்வளவு நெடுங்கை; ஒருவர் என்ன இருவருக்குமே நெடுங்கை; குடும்பத்துக்கு எப்படி கட்டுப்படியாகும்” என்பவை வழக்கு மொழிகள், நீட்டல், கைநீட்டல் காண்க.

நெருக்கம் - நட்பு, உறவு

நெருங்கி நெருங்கி அல்லது அடுத்தடுத்து இருப்பதே நெருக்கம். பயிர்கள் நெருக்கம், களைநெருக்கம் என வழங்குவர். மக்கள் நெருக்கம் மிகுதி நெரிசல்மிகுதி என மக்களுக்கும் நெருக்க ஆட்சியுண்டு. ஆனால், இந்நெருக்கம் உள்ளநெருக்கம்; உறவு நெருக்கம், ஆதலால், வழக்குச் சொல் வகையைச் சேர்ந்தது. எனக்கு நெருக்கமான உறவு; எனக்கு நெருக்கமான நண்பர் என்பவற்றில் நெருக்கப் பொருள் அறிக. இதே பொருள், “எனக்கு நெருக்கமானவர்” என்பதிலும் உள்ளதறிக. அது நட்புப் பொருளது. நெருங்கிய நண்பர் என்பதாம்.

நெருக்குதல் - மலநீர் கழித்தல்

நெருக்கம் என்பது செறிவுப் பொருளது. பயிர் நெருக்கம், களை நெருக்கம் என்பவை அதனைக் காட்டும். “எனக்கு நெருக்க மானவர்" என்பது உறவினர் நண்பர் என்பதைக் காட்டும் செறிவுப்பொருளேதரும். அடிக்கடி துன்புறுத்தலும் நெருக்கல் என்றும் நெருக்கடி என்றும் சொல்லப்படும். அவன் செய்யும் நெருக்குதலுக்கு அளவேயில்லை என்பது அதனைக் காட்டும். ஒன்றுக்கு இரண்டுக்கு என்பவை நெருக்குதலாகச் சொல்லப் படுதல் உண்டு. உடனே செய்யவேண்டிய நெருக்கடிகள் தாமே அவை. இயற்கையின் அறைகூவல் அல்லவா அவை?