வழக்குச் சொல் அகராதி
பிட்டுப்பிட்டு வைத்தல்-ஒன்று விடாமல் சொல்லல்
129
பிள் என்னும் வேரில் இருந்து பிறக்கும் சொல், பிட்டு. ‘பிள்' என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில் வரும் பிட்டு என்னும் பண்டம் கைபட்ட அளவில் பொலபொல என உதிர்தலாம், அப்பிட்டு உதிர்தல் போலச் சொல்லை உதிர்ப்பது பாக்கி ஒன்றும் இல்லாமல் - சொல்லை உதிர்ப்பது - பிட்டுப் பிட்டு வைத்தல் எனப்படும். “அவனிடம் ஒளிவு மறைவு ஒன்றும் செய்ய முடியாது. அவன்தான் உள்ளதை உள்ளபடி பிட்டுப் பிட்டுவைத்து விடுகிறானே” என்பது பிட்டு வைப்பவன் தேர்ச் சியைத் தெரிவிப்பதாம்.
பிடித்தம் - பற்றுமை, இறுக்குதல்
ப்
என்பது
கையால் பிடிப்பது பிடித்தல். பிடியளவு கையளவே. களிறு கையால் பிடிக்க வாய்த்த பெண் யானையே பிடியாகிப் பெண்பெயர் ஆகியிது. கையால் பிடிக்கும் பிடிப்பு மனத்தால் பிடிப்பதாகவும் வழக்கில் உள்ளது. அது பிடித்த மாகும். பிடித்தம் என்பது பற்றுமையுடையது. எனக்குப் பிடித் தால் உண்பேன், போவேன் என்பதும், எனக்குப் பிடித்தமானது அது, அவர் என்பதும் பிடித்தப் பற்றுமை காட்டும். இடுப்புப் பிடிப்பு, பிடிப்பான உடை, நீர்ப்பிடிப்பு இடம் என்பவை இறுக்கப் பொருள் தருவன.
பிடித்தாட்டல் - துன்புறுத்தல், சொல்லுக்குக்
கட்டுப்பட்டு நடக்க வைத்தல்
பிடித்தல் - கையால் பிடித்தல்; குடுமியைப்பிடித்து ஆட்டு தல் என்பது செயலற்றுப் போகவைத்துக் கட்டுப்படச் செய்வ தாம். உடுக்கடியில் குடுமியைப் பிடித்து ஆட்டி அலைக்கழிப்பர். பேயோட்டுதல் என்பது அதன் பெயர். ஆதலால் பிடித்தாட்டல் என்பது துன்புறுத்தலுக்கு ஆயது. சிலருக்கு சிறு பிடி கிடைத்து விட்டால் போதும். அதனைக் கொண்டு பெரும்பாடு படுத்தி விடுவர். தம் சொற்படியெல்லாம் நடக்க வைப்பர். “அவன் ன் பிடிகொடுப்பானென்று பார்க்கின்றேன்; எப்படியோ தப்பித்துக் கொள்கிறான்" என்பதில் பிடித்தாட்டல் வேட்கை வெளியாகும். பிடித்துவிடல் - அடித்தல்
மூட்டுவலி தசைவலி இருந்தால் பிடித்துவிடுவார்; எண்ணெய் மருந்து தேய்த்தல், உருவிவிடல், ‘சுழுக்கு’ எடுத்தல்
ப