உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

ஆகியவும் செய்வர். அதுபோல், "ஒருவன் சொன்ன சொல் கேளாவிட்டால் உன்னைப் பிடித்துவிடவேண்டுமா?" என்பர். பிடித்துவிடல் என்பதால் அடித்து வீங்கவைத்தல், நரம்பைச் சுண்டிவிடல் ஆகியன செய்வாராம். அதனால், "சொன்னதைக் கேட்டு ஒழுங்காக நட என எச்சரித்து விடுகிறாராம். ஈமொய்த்தல், பற்றுப்போடல், தடவிக்கொடுத்தல், தட்டுதல் என்பன இவ்வழிப்பட்டனவே.

பிடிமானம் - சிக்கனம்

வருமானம், பெறுமானம் என்பவற்றில் வரும் 'மானம்' அளவுப் பொருளது. அதுபோல் பிடிமானம் என்பதும் அளவுப் பாருளதே. பிடிமானமானவன் பிடிமானமாகச் சல விடல் என்பவற்றில் பிடிமானம் என்பதற்குச் சிக்கனப் பொருள் உள்ளமை காண்க.

L

பிடிமானம் என்பது வந்ததையெல்லாம் செலவிட்டு விடா மல்; இறுக்கிப் பற்றி அல்லது சேமித்து வைப்பதாம். ஆன முதலில் அதிகம் செலவாகி மானமழிதல் பிடிமானக்காரர்க்கு இல்லையாம்.

பிடுங்குதல் - இழிவுறுத்தல்

பயிரைப் பிடுங்குதல், நடுதல், களைபிடுங்குதல் என்பவை உழவர் பணிகள். ஒருவர் வைத்திருக்கும் பொருளைப் பிடுங்குதல் பறித்தல் என்றும் பொருள்தரும். இப்பிடுங்குதல் பலவகையில் வழக்கில் இருந்தாலும் அவையெல்லாம் நாற்றுப்பிடுங்கல், களை பிடுங்கல், கடலைபிடுங்கல் எனப் பெயர் சுட்டியேவரும். அச் சுட்டு இல்லாமல் பிடுங்குதல் என்று மட்டும் வரின், மயிர் பிடுங்குதல் என்பதையே குறிக்கும். செய்யமாட்டாத ஒருவன் ஒன்றைச் செய்வேன் என்றால் “ஆமாம்; நீ பிடுங்குவாய்; போ' என்பது வழக்கு. உன்னால் முடியாது என இழிவுறுத்தலாக அமைவது இப்பிடுங்குதலாம். “நான் என்ன பிடுங்குகிற வேலையா செய்கிறேன்” என்பதிலும் இழிபாடே புலப்பாடாம். பிதுக்குதல் - துன்புறுத்தல்

கட்டி ஒன்று ஏற்பட்டால் அதனைப் பழுத்த நிலை பார்த்து பிதுக்கி எடுத்தல் உண்டு. ஆணியும் சீழும் வெளிப்பட்டால் புண் ஆறும். மொச்சைப் பயற்றை ஊறவைத்துத் தோலைப் பிதுக்கி எடுத்து அப்புறப்படுத்தல் உண்டு. அதற்குப் ‘பிதுக்குப் பயறு என்பது பெயர். அப்பிதுக்குதல் போலத் துன்புறுத்திப் பறிப்பது