134
இளங்குமரனார் தமிழ்வளம் – 1
பருத்தவராக இருப்பின் அவர்தம் பருமைத் தோற்றம் காயிற்பரிய பூசுணைக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தூண்டியிருக்கிறது. அவ்வகையில் வந்ததே, “அவர் ஒரு பூசுணைப்பழம்" என்பது பூசுணைப்பழம் உருண்டு புரண்டு வருவதைப் பாருங்களேன்” என்று மென்னகை புரிவதும் காணக் கூடியதே.
66
பூட்டு - ஐந்து
6
ம்
பூட்டுதற்குப் பயன்படும் ஒன்று பூட்டு எனப்படும். அது தாழ், தாழ்ப்பாள் எனவும் வழங்கும். ஒன்றோடு ன்றோடு ஒன்று இணைத்துப் பூட்டுவதற்கு உரியது பூட்டு எனப்படுகிறது. இலக்கணத்தில் விற்பூட்டு, அல்லது பூட்டுவில் எனப் பொருள் கோள் ஒன்றுவரும், இரண்டு கைகளையும் கோத்துக் கொள்ளல் ‘பூட்டியகை’ அல்லது ‘கைப்பூட்டு' எனப்படும். இங்குப் பூட்டு என்பது அடுக்கிவைக்கப்பட்ட ஐந்து இலையை குறிக்கும். ஐந்து உருபா எனக்குறிப்பதும் உண்டு. அடுக்கு, கை என்பவை காண்க.
பூச்சி - பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல்
L
பூச்சி என்பது புழுப்பூச்சி என்னும் இணைச் சொல்லில் வருவது, புழு முதல் நிலையும், அதன் வளர்ச்சி பூச்சியுமாம். பூச்சி தாவும்போது அதன் நிழலைக் கண்டவன் அந் நிழலைப் பூச்சி என்று சொல்லிப் பின்னே எல்லா நிழலையும் குறித்ததாகலாம். பாம்பைக் கொடி என்பதுபோலப் பூச்சி என்பதும் உண்டு. நச்சுயிரியின் கடியைப் பூச்சிக்கடி என்பதும் வழக்கே. கண் பொத்தி ஆடும் ஆட்டம் கண்ணாம் பூச்சி எனப்படுகிறது. குழந்தைகளை அல்லது அஞ்சுபவரை அஞ்சி நடுங்கவைக்கப் பூச்சி காட்டல் உண்டு. அது அச்சுறுத்தல் பொருளதாம் ‘அப் பூச்சி' எனவரும் நாலாயிரப்பனுவல் பகுதி குழந்தைகளைப் பெற்றவர்கள் அச்சுறுத்தல் தொடர்பை விளக்கும்.
பூச்சு வேலை - ஏமாற்று வேலை
சுவர்க்குப் பூசுதல், ஈயம் பூசுதல் என்பவை பூசும் வேலையைக் குறிக்கும். பூசுதல், முகம் பூசுதல் (முகம் கழுவுதல்) எனவும் வரும். பூசுபவர் பூசகர். தெய்வப் படிவத்தை நீரிட்டுக் கழுவி வழிபாடு செய்பவர் அவராகலின், இனிச் சில போலி மாழை (உலோகங்)களை உயர் மாழைகளாகக் காட்ட விரும்பு வர். பூச்சுவேலை செய்வர். அணிகலங்களில் பெரிய அளவில் பூச்சு (கவரிங்) வேலை நிகழ்கிறது. இவ்வேலை போலியானது. ஆதலால் பூச்சு வேலை என்பது ஏமாற்று வேலை என்னும்