உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

135

பொருளுக்கு உரிமையேற்று வழங்குவதாயிற்று. பூசி மெழுகல்

காண்க.

பூசி மெழுகல் - மறைத்தல்

தளத்தில் வெடிப்பு ஏற்படுமானால் பூசி மெழுகுவது வழக்கம், அடுப்பு முன்னாளில் மண்ணால் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. சுடு மண் அடுப்பை வைத்து அதனைப் பூசி மெழுகுவர். அம்மெழுகுதல் வெள்ளி செவ்வாய் என இரு நாள்களிலும் செய்வர். பூசி மெழுகுவதால் அடுப்பில் ஏற் பட்டிருக்கும் விரிசல், வெடிப்பு, கீறல் ஆயவை மறைந்துபோம். அவ்வழக்கில் இருந்து குற்றம் குறை கேடு ஆயவற்றைப் புலப் பட ா வண்ணம் மறைத்தல் பூசி மெழுகுதலாக வழங்கலாயிற்று. "அவன் பூசி மெழுகுவதில் தேர்ந்த ஆள் என்பதில் அவன் மறைப்புத்திறம் மறைவின்றி விளங்கும்.

பூசை வைத்தல் - அடித்தல்

வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம் கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப் படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது. சாமியாடுவான் சாமியாடி. அவன் கையில் சாட்டைக்கயிறு இருக்கும். அதனைச் சுழற்றிப் பேரொலியுண்டாகத் தன் மேல் அறைந்துகொண்டு ஆவேச மாகி ஆடுவான். தெய்வ வாக்குச் சொல்வான். அவ்வழக்கில் இருந்து பூசைவைத்தல் என்பதற்கு அடித்தல் பொருள் வந்தது. பூசைபோடுதல் என்பதும் அதுவே, “உனக்குப் பூசை போட்டால் தான் குனிய நிமிர முடியும்" என்பதில் கட்டளைக்குப் படி யாததை அடியால் படியவைக்கும் முனைப்பு வெளிப்படும். பூத்துப்போதல் - கண் ஒளி மழுங்கிப் போதல்

பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். “உன்னைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போய்விட்டது என்பதில் பூத்துப்போதல் ஒளி மழுங்கி அல்லது மங்கிப் போதல் புலப்படும். கண்ணில் உண்டாகும் ஒரு நோய். பூ விழுதல் கண்ணின் பாவையில் வெள்ளை விழுந்து விரிந்து படரு மானால் பூவிழுந்ததாகக் கூறுவர். பூவிழுந்தால் பார்வைபோய் விட்டது என்பது பொருள். அதன் வழியாக உண்டாகிய பூத்துப்போதல் என்பதற்கு ஒளி மழுங்கிப் போதல் பொருளாம்.

ரு