வழக்குச் சொல் அகராதி
66
137
'கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்” குறிப்பார் அவர். இவ்வாறு சொல்லாமல் செய்தியறிதலும் குறிப்புப் பேச்சே. அஃது அற்ற இடமும் உண்டு. அது, 'கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல” என்னும் இடம். பேச்சற்ற அவ்வின்ப இடம் ‘பேசுதல்' என்பதால் பொதுமக்கள் வாக்கிலே பயிலுதல் வியப்பே. பேச்சில்லாமை காண்க.
பேசுதல் - திட்டுதல்
உரையாடல் பொருளில் வழங்கும் பேசுதல், திட்டுதல் பொருளிலும் வழங்குகின்றது. “என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நன்றாகப் பேசிவிட்டேன்” என்பதில் பேச்சு திட்டுதல் பொருளில் வந்தது, “என்ன பேச்சுப் பேசி என்ன? தைக்கிற வனுக்குத் தானே தைக்கும்” என்பதில் பேச்சுத் தைக்க வேண்டும் என்று கருதும் கருத்தால் வசைமொழி என்பது வெளிப்படை "நீபேசி விட்டாய், நான் பதிலுக்குப் பேசினால் நீதாங்க மாட்டாய்” என்பதில் வசைக்கு வசையும் பேச்சாக இசைதல் விளங்கும்.
பொங்கல் வைத்தல் - கொலைபுரிதல், அழித்தல்
பொங்கலுள் தைப்பொங்கல் உயிர்ப்பலியற்றது. மற்றைப் பொங்கல்கள் அதிலும் குறிப்பாகச் சிற்றூர்ச் சிறு தெய்வப் பொங்கல்கள் உயிர்க் கொலைக்குப் பேரிடமாக இருந்தவை. உயிர்ப்பலித் தடைச்சட்டம் வந்த பின்னரும் கூட முற்றாகத் தடுத்துவிட முடியாத அளவு வெறிக்கொலைக்கு இடமாக இருப்பவை. இவ்வழக்கில் இருந்தே பொங்கல் வைத்தல் என்ப தற்குக் கொலைபுரிதல் பொருள் வந்தது. மனிதரைப் பலியூட்டிய வரலாறும் உண்டு என்பது இந்நூற்றாண்டிலும் கூட ஆங்காங்கு நடக்கும் கயமைகளால் அறியப்படுவதே. “உன்னைப் பொங்கல் போடுவோமா?” என்பது கொலை வினா.
பொட்டலாக்கல் - பயனைக் கெடுத்தல்
பொட்டல் என்பது மேட்டு நிலம்: நீர்வளமற்று வான் மழையை நோக்கிப் புன் பயிர் செய்ய உதவுவது. அப்பயிர்க்கும் ஆகாத மேடும் உண்டு. அது வறும் பொட்டல், வெறும் பொட்டல், களத்துப் பொட்டல் எனப்படும். தலையில் விழும் வழுக்கையைப் பொட்டல் என்பதும் உண்டு. அப்பொட்டல் மயிர்வளம் இன்மை காட்டும் என்றால், இப்பொட்டல் பயிர் வளம் இன்மை காட்டுவது தெளிவு. இப்பொட்டலில் இருந்து பிறந்தது தானே தலைப்பொட்டல். வளமான நிலத்தையும்