138
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
உழைத்துப் பாடுபடாமையால் பொட்டலாக்கிவிடுவார் உண்டு. அதுபோல் வளமான குடும்பத்தில் பிறந்தவருள் சிலரும் தம் குடியைப் பொட்டலாக்கிவிடுவர். அவரைப் பொட்டலாக்கப் பிறந்தவன் எனப் பழிப்பது வழக்கிடைச் செய்தி.
போக்காடு - சாவு
நோக்காடு நோவு, சாக்காடு சாவு என வருதல் போலப் போக்காடு ‘போவு’ என வழக்கில் இல்லை. போக்காடு ‘சாவு' என்னும் பொருளில் வழங்குகின்றது. இந்தப்பாடுபட்டுக் கேவலப்படுவதற்குப் போக்காடு வந்தாலும் ஒரே போக்காகப் போய்ச் சேரலாம்” என்பதில் போக்காட்டின் பொருள் நன்கு வெளிப்படும். போனகாடு, போகின்ற காடு, போகுங்காடு என்னும் பொருளில் 'போங்காடாக’ வர வேண்டியது வல் லொற்றாகி 'போக்காடு' என நின்றது போலும். காடு என்பது இடுகாடு, சுடுகாடு, முதுகாடு, நன்காடு என்பவற்றில் வருதல் அறிக. அனைவரும் போங்காடு போக்காடாம்.
போக்கு வரவு-நட்பு, தொடர்பு
போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது பின்னே, இருக்கும் இடம் தேடியும் போக்குவரவு புரியத் தூண்டி நிலைப்படுத்துவதால் போக்கு வரவுக்கு நட்புப் பொருள் உண்டாயிற்றாம். மதியார் இல்லத்து மிதியாமை கோடி பெறும் என்பதால், மதிப்புள்ள இடத்து மிதித்தல் வெளிப்படையாம். போக்குவரவு எங்களுக்குள் இல்லை என்றால் நட்பில்லை என்பதுடன் பகையுண்டு என்பதும் கூடக் காட்டுவதாக வழங்குகின்றது.
போதல் - சாவு
போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். “போனார் தமக்கோர் புக்கில் உண்டு” என்பது மணி மேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே போக்காகப் போதல் திரும்பாமையைக் குறிக்கும். போய்ப் போய் இப்படி வருவதற்கு ஒரே போக்காகப் போய்விட்டாலும் தலையை முழுகலாம். அதற்கும் வழியில்லை என்பதில் ஓடிப்போனவர்களைத் தேடித் தவித்த துயர் வெளிப்படும். போதல் உயிர் போதல், வீட்டை
டை