உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் 1

மேய்ச்சல் - வருவாய்

ஆடு மாடு, மேய்தல் உடையவை; மேய்ப்புத் தொழிலும், மேய்ப்பரும், மேய்ச்சல் புலமும் உண்மை அறிந்தவை. இவ்வாடு மாடு மேய்தலை விடுத்துப் போனபோன இடங்களிலெல்லாம் வருவாய் தேடிக்கொண்டு வருவதை “மேய்ச்சல்" என்பதும் 'நல்ல மேய்ச்சல்' என்பதும் வழக்கு. “அவனுக்கு என்ன எங்கே போனாலும் மேய்ச்சலுக்குக் குறைவு இல்லை; நமக்குத்தான் காய்ச்சல்” என்பர். மேய்ச்சல் என்பது வருவாய்ப் பொருளும், காய்ச்சல் என்பது வருவாயின்மைப் பொருளும் தருவனவாம். மேனித்து - உழையாமை

குனியாமல் வளையாமல் (வேலையின்றித்) திரிவதை மேனித்தாகத் திரிதல் என்பர். “மேல் வலிக்காமல் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான் வேலை" என்பது மேனித்தரைப் பற்றிச் சொல்லும் வசையுரை. மேனிற்றல் மேனிற்று மேனித்து என ஆகியிருக்கலாம். மேனிற்றலாவது மிதத்தல் என்பதாம். ‘அவன் மிதப்பில் திரிகிறான்” என்னும் வழக்குச் சொல் இதனை விளக்கும். மிதப்பில் திரிதல் என்பது ஆங்கும் இங்கும் அலை தல், ஆழ்ந்து ஒன்றிலும் ஈடுபடாதிருத்தல் என்பவற்றைக் குறிப்ப தாம். மேனி குலுங்காமல் இருக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம் என்பதும் இவ்வழிப்பட்டதே.

66

மொட்டைச்சி - கைம்மையாட்டி

L

கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு காலத்தில் மொட்டை போடுதல் வழக்காக இருந்தது. அவ்வழக்கம் அண்மைக்காலம் வரை கூட இருந்தது. அவ்வழக்கமும், குறித்த இன வழக்காகவே இருந்தது. பொது வழக்கன்று. மொட்டைபோடும் வழக்கில் இருந்து, மொட்டை போட்ட வளைக் காண்பது செயற் பாட்டுத்தடை (சகுனத்தடை) என்னும் இழிவுக்கு ஆட்படுத் தவும் இடமாயிற்று. சமய வழக்கமாக மொட்டை போடுதல் பல்வேறு சமயங்களில் இடம் பெற்று இந்நாள்வரை கூட நடை முறையில் உள்ளது. ஆனால் அவை பழிப்பின்பாற்படுத்தப் படுவன அல்ல.

மொட்டையடித்தல் - வெறுமையாக்கல்

மரங்களை மொட்டைதட்டல், மொட்டையடித்தல் போல் செல்வத்தை மொட்டை தட்டலாக வழங்குகின்றது.