196
இளங்குமரனார் தமிழ்வளம்
_
1
இரண்டும் விழாக் களின்போது தெளிக்கும் தெளி
வந்துளது. நீர்களே யாம்.
அலப்பு
ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி அலைக் கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கிலும் உள்ளமை, பேராசை பிடித்து அலைவாரை ‘அலப்பு' என்னும் பட்டப் பெயரிட்டு அழைப்பதால் விளங்கும். அலைப்பு > அலப்பு.
அலவு
ஒ.நோ: மலைப்பு> மலப்பு; கலையம்> கலயம்.
காய்க்காத பனை ஆண்பனை. அதனை ‘அலவு' என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது. காய்த்தலை அற்றுப்போனது அலவு ஆயிற்று.
அலுக்கி
அலுக்குதல் என்பது அசைத்தல், துன்பப்படுத்துதல் என்னும் பொருள் தருவது. வலுவாகக் கடிக்கும் கட்டெறும்பை அலுக்கி என்பது பெட்டவாய்த்தலைப் பகுதியில் வழங்கும் வழக்கமாகும்.
அலுங்கு(1)
அலுங்குதல் அசைதல். தட்டாங்கல் ஆட்டத்தில் எடுக்கும் கல்லை அன்றி வேறுகல் அசைதல் ஆகாமல் எடுத்து ஆடவேண்டும். அசைந்தால் அலுங்கிவிட்டது என ஆட்டத்தை விடச் செய்வர். 'அலுங்காமல்' கொண்டு போ என்பது என்ணெய், தண்ணீர், கண்ணாடி கொண்டு போவார்க்குச் சொல்லும் அறிவுரை.
பனையின் பாளையை அசைத்து மிதித்து விடுவது கருதி அலுங்கு என்பது நெல்லை வழக்கு.
அலுங்கு(2)
அலுங்கு என்பது ஓர் உயிரியின் பெயர். அது, ஊரும் உயிரி. எறும்பைத் தின்னும் அதனை அலுங்கு என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. அலுக்கி என்பது கட்டெறும்பு எனப்படுவதால் அதனைத் தின்பது அலுங்கி எனப்பட்ட தாகலாம்.
அலைவாக்காக (அலாக்காக)
க
ஒன்றைத் தூக்குவதை அலாக்காக - கால், மார்பு, தோள் முதலியவற்றில் படாமல் தலைக்குமேல் - தூக்கு என்பர். அலை