வட்டார வழக்குச் சொல் அகராதி
197
என்படி மேலே துள்ளி எழும்புகிறதோ அதுபோல் என்னும் உவமை வழிப்பட்ட ஆட்சியாகும். இது. தென்னகப் பொது வழக்கு.
அவக்காச்சி
தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு. ஆவல் என்பதன் வழியாக ஏற்பட்டிருக்கலாம். ஆவல் ஆசை என்பவை மனத்தால் பற்றுதலாம்.
அவதி
வேலையோ
கல்வியோ இல்லாமல் விடப்படும்
விடுமுறையை அவதி என்பது நெல்லை வழக்கு.
அவம் என்பது தம் கடமை செய்யாது இருக்கும் நிலை.
தவம் என்பது தம் கடமை செய்யும் நிலை. "தவம் செய் வார் தம் கருமம் செய்வார்” என்பது திருக்குறள். பணியிலாப் பொழுதை அவப்பொழுதாகக் கருதிச் சொல்லப்பட்டது இது.
இனி, அவதி என்பதற்குத் துயரப்பொருள் உண்டு. அது அவலம் என்பதன் வழிவந்தது.
அவயான்
ய
‘ஆசைப்பெருக்கு' என்பது வழக்கு. அது கட்டில் நில்லாமல் பெருகுவதால் ‘ஆசைக்கோர் அளவில்லை’; ‘ஆரா இயற்கை அவா’ எனப்பட்டது. ஆசைப்பெருக்கம் போல் பெருத்த உடலுடைய தாகிய பேரெலி (பெருச்சாளி, பெருக்கான், பொண்டான்) என்பதை ‘அவயான்’ என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. இவண் ஆசை என்பது பெரிய பெருகிய என்னும் பொருளுடைய தாயிற்று.
அவியல்
அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை. இது பொதுவழக்கு. அவியல் என்பது இட்டவியைக் குறிப்பது கண்டமனுர் வழக்கு. இட்டவி வி (இட்டிலி)
அழிகதை
பிசிர் எனப்படுவது புதிர் என்றும் விடுகதை என்றும் 6 வழங்கப்படும். விடுகதையை அழிகதை என்பது பெரியகுள