உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

215

கால் என்பதும் உண்டு. குத்துதல் குற்றுதலாம்; அதாவது ஊன்றுதல். குத்தி, 'குதி'யாகத் தொகுத்தது.

உப்புசம்

வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ வழக்கில் உப்புசம் என்பர். ஆனால், காற்றுப்பிசிறாமல் வெப்பு மிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும்.

உப்புநீர்

உப்புத் தன்மை அமைந்த அல்லது உப்புக் கரைசலாய நீர் உப்பு நீர் எனப்படுதல் பொதுவழக்கு. உப்பு நீர் என்பதைக் கண்ணீர் என்னும் பொருளில் வழங்குதல் தென் தமிழ்நாட்டு ழக்காகும். கண்ணீர் உப்புத் தன்மை உடையைக் குறிக்கும் ஆட்சி இது. உம்மா

குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படு கிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது ‘யாய்' என்றும், நின் தாய் என்பது ‘ஞாய்' என்றும் வழங்கப்பட்ட பண்டையோர் வழக்கை எண்ணலாம். என் அம்மா என்பதை எம்மா, எம்மோ என்பது நெல்லை, முகவை வழக்கே. “எம்மோய்” என்பது கம்பர் சொல்.

உமல்

மீனவர் தம் மீன் கூடை யை ‘உமல்' என்பது வழக்கம். மற்றைக் கூடைகளினும் மீன் அள்ளி வரும் கூடை - வலையில் இருந்து மீனைக் கொட்டும் வகையில் அகலமும் உயரமும் உடையதாக இருப்பதால் ‘உமல்' எனப்பட்டதாம். ஓங்கியும் ஏங்கியும் ஒலியெழுப்பி அழும் அழுகை ஓமலிப்பு என்பது தென்னக வழக்கு.

உய்தம்

உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது. “உன் உய்தக் காரன் உன்னைத் தேடி வந்தான்” என்பர்.

உராய்வு இல்லாமல், செல்ல வண்டி அச்சில் தடவும் நெய்க்கு - உயவு நெய் என்பது பெயர். உயவு> உய்வு> உய்தம் ஆயது. உயவு நெய் ‘பசை’ ‘மசை’ எனவும் வழங்குதல் உண்டு. பசை என்பது ஒட்டும் தன்மையது ஆதலால் நட்புக்கும் கொள்ளப் படும். அது பொருள் கருதிச் சேரும் நட்புக்கும் ஆயிற்று.