உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம் 1

உய்யக் கொண்டான்

பழஞ்சோறு எனப் பொதுமக்கள் வழங்குவதை மாலியர் வைணவர்) உய்யக் கொண்டான் என்பார். உயிர் உய்ந்து இருப்பதற்காக உண்ணப்படும் சோற்றை உய்யக் கொண்டான் என்றனர். அப்பெயரால் திருச்சி மாநகரை ஒட்டி ஓடும் கால்வாய் ஒன்று உண்டு.

கடலைக்காய்

காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே கூறுவர். ஆனால் சேலம் மாவட்டத்தார் கட லைக்காய் என

வழங்குகின்றனர்.

உயிர்க்காரர்

உயிர்போன்ற

நட்பினரை உயிர்க்காரர் என்பது

உயிர்

குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும். பகுத்தன்ன (உயிரைப் பகுத்து வைத்தாற்போன்ற), ஈருடல் ஓருயிர், இருதலை ஒருபுறா, கவைமகவு என்பனவெல்லாம் உயிரொன்றிய காதலையும் நட்பையும் குறிப்பனவாம்.

உரக்குண்டு

குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும். எ-கா: வெற்றிலைக் குண்டு (வத்தலக்குண்டு). கூத்தியார் குண்டு. (நட்டுவாங்கம் பிடித்தார்க்கு வழங்கப்பட்ட ஊர்)

டம்

தழை இலை மட்கி உரமாவதற்காக இட்டுவைக்கும் குழியாக இருப்பதால், அதனைக் குண்டு என்னும் ஆட்சி உண்டாகி, உரக்குழியை ‘உரக்குண்டு உரக்குண்டு' என வழங்குதல் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது.

உரட்டான்கை

உரம் வலிமை; உரம்

இல்லாதது, உரட்டான்; வலக்

கயினும் இ க்கை வலிமையைப் பழகாமையால் வலிமை குறைந்ததாக உள்ளது அல்லது ஆக்கப்பட்டது. இ இடக்கைப் பழக்கம் உடையார்க்கு அக்கை வலிமை வலக்கையினும் மிக்கதாக இருத்தல் அறியத்தக்கது.