வட்டார வழக்குச் சொல் அகராதி
217
உரட்டான்கை என்பது இடக்கையைக் குறித்தல் கருவூர் வட்டார வழக்காகும். சென்னைப் பகுதியிலும் அவ்வழக் குண்டாம். அது சென்றடைந்த தாகலாம்.
உரவி
ஆ' என்பது எதிர்மறை இடைநிலை.
உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது. டைவெளி வளி மிகப்படப் பாய்ந்து செல்லும் பாய்ச்சையை (பாச்சையை) உரவி என்பது திருவில்லிப் புத்தூர் வட்டார வழக்காகும். உரம், உரன் என்பவற்றின் வழிவந்த பெயரீடு இது. உரிஞ்சல்
உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி.
செறிவுடைய செடி கொடி மரம் நிறைந்த காட்டில் சென்றால் அவை உரிஞ்சுதலும் குருதி வடியச் செய்தலும் அறியலாம். புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும்.
உருத்து
66
மிக
அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது. என்மேல் அவன் உருத்தானவன்” என்பர். "உருத்தானவன் உருத்தில்லாதவன் என்பது நல்லது பொல்லதில் வெளிப்பட்டுவிடும்" என்றும் வழங்குவர். உரிமை மிக்க அன்பு உருத்து ஆகும். உரித்து என்னும் சொல் வழிப்பட்டது. உயிர் உரிமைச் சான்று அன்பே என்பது,“அன்பின் வழியது உயிர்நிலை” “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பவற்றால் விளங்கும்.
உருமால்
966
தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும், தலையை மிக உயரமாக்கிக் காட்டுவதாகவும் உள்ளமையால் இலக்கிய நலம் விளங்க உருமால் எனப்பட்டது.