உலுப்பை
வட்டார வழக்குச் சொல் அகராதி
219
பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு, ஈமொய்த்தல், எறும்பு மொய்த்தல் என்பவற்றை எண்ணுக.
இனி நெல்லி, புளி முதலியவற்றை உதிர்த்தலை உலுப்புதல் என்பது வழக்கு. உலுப்பினால் கிளைகளைப் பற்றி அசைத்தால் கூட்டி அள்ளும் அளவுக்கு பொது பொதுவென உதிரும். அதுபோல் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும்.
உவச்சர்
உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழுக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை உவச்சக்காணி என வழங்கப்படுதல் கல்வெட்டுச் செய்தி. குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார்.
உவை
கி
கள் என்பது பல என்பதன் இறுதி (ஈறு) எ - டு: அவர்கள், பூரியர்கள், மரங்கள். பயிருக்கு இடையூறாகச் செறிந்து கிடக்கும் புல் பூண்டுகள் களை எனப்படும். களைக்கொட்டு ஒரு கருவி. களை கட்டல் தொழில்; அது களை வெட்டுதலாம். குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும். உவை செறிவு என்னும் பொருளில் வருதல் இது.
உழவு
-
உழுதல் தொழிலை உழவு என்பது பொது வழக்கு. ஆனால் மாட்டுத் தரகர், உழவர் ஆயோரிடை 'உழவு' என்பது ஆ வயது என்னும் பொருளில் வழங்குகின்றது. உழுவதற்கு ஏற்ற வயது என்பது கொண்டு அதன் அடிப்படையில் இரண்டு உழவு, மூன்று உழவு என வயது மதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேந்தர் களின் ஆட்சியாண்டும், துறவோரின்
கணக்கிடப்படுவதை எண்ணலாம்.
உள்ளிங்கம்
ஆட்சியாண்டும்
இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல் என்னும் பொருளன. உள்ளாக இழுக்கும் ஒன்று உயரம் தணிதல் வெளிப்படை. நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும்