உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுக்கல்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

247

மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. அதுகாற்றுக்கு இயல்பாக வளைந்து நிமிர்தலால் அப்பெயர் பெற்றதாம். வளை என்னும் மூங்கில் பெயரும் அப் பொருளதே.

கயந்தலை:

யானையின்

ளங்கன்றைக்

கயந்தலை என்பது

தொன்மைச் செய்யுள் வழக்கு. ‘கன்று கயந்தலை' மீமிசைச் சொல். அல்லது ஒரு பொருள் பன்மொழி. கயந்தலை என்பது நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.

கரண்டகம்:

நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். கரகம் என்பது பழ வழக்கு. கமண்டலம், கமண்டலு என்பவை கம்பர் கால வழக்கு. சுண்ணாம்புக் கூட்டைக் கரண்டகம் என்பது பிற்கால இலக்கிய வழக்கு; தனிப்பாடல், காளமேகர்.

கரண்டு:

-

நல்ல உடலுடன் இருந்தவன் இருக்க வேண்டியவன் வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பர். கர் என்னும் வேர்வழிவந்த இச்சொல் முதலாவதாக வண்ணம் குறித்து, அதன்பின் வளக்குறைவு குறித்து ஆயது. எ-டு: கரடு, குருதி சுண்டினால் சிவந்த உடலரும் கரியர் ஆதல் கண்கூடு. கரண்டு போனான்(ள்) என்பது முகவை வழக்கு.

கரணம்:

பொழுது என்னும் பொருளில் கரணம் என்னும் சொல் கருங்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. கரணம் என்பது திருமணச் சடங்கு ஆதலால், அது நிகழ்த்தப்படும் பொழுது கரணம் எனப்பட்டதாகும்.

கரப்பு:

கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது கரவேல் என்பது ஆத்திசூடி. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார