உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வழக்கு. "நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறை யும்” நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்; ‘கரவிலார் தம்மைக் கரவார்’ ஒருபாடலில் இத்தனை கரப்புச் சான்று.

கரப்பெண்:

மணக்கும் முறையுடைய பெண் ய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தரும் கொடை விழாவாக மணவிழா

நடந்தமையாலும்

அதனை

மணமக்களின்

தாதா

செய்தமையாலும் தாதா என்பதற்குக் கொடையாளர் என்னும் பொருள் உண்டாயது. அவ்வழிப்பட்டது கரப் பெண் என்பது. கரைப்பெண் என்பது கரப்பெண் எனவும் ஆகியிருக்கலாம். கரைப்பெண்டு காண்க.

கரியாமணக்கு:

ஆமணக்குப் போலும்

லையுடையதும், ஆ யதும், ஆமணக்கு

இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் ‘கரியாமணக்கு' என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும்.

கரிக்கால்:

ள்ளையாட்டைப் பார்த்தால் கரிய ஆடுகளையும் காணலாம். ஆனால் வெள்ளையாடு என்பதே வழக்கு. இதனால் காராட்டை வெள்ளையாடு எனல் மங்கல வழக்கு என்றனர் இலக்கணர். ஆனால் கருவூர் வட்டார வழக்கில் வெள்ளையாட்டைக் கரிக்கால் என வழங்குகின்றனர்.

கரியிலை:

காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங் கோடு வட்டார வழக்கு. காயும் ஒன்று கருநிறம் அடைதலும், சருகு ஆதலும் உண்மையால் கரியிலை சருகு இலையைக் குறித்து வழங்குகின்றது.

கருக்கடை:

பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மை யான முள் உடையது; யது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும்வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு. கருக்கடை = அக்கறை. கரிசனை என்பதும் அக்கறைப் பொருளதாக வழங்கும்.