உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருக்கு:

வட்டார வழக்குச் சொல் அகராதி

249

குளம்பி(காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்ப தால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு. இனி இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்ப தாகக் குறிப்பிடுதல் உண்டு. அது முன்னது போல் பொருந்தி வரவில்லை. ஏனெனில் பொதுமக்கள் வழக்கு புனைவோ சிக்கலோ அற்றதாகவும் வெளிப்படையாகப் பொருந்திய பொருள் தருவதாகவும் இருக்கும்.

கருப்பம்புல்:

கரும்பு புல்லினப் பயிராகும். அது கருப்பு என வருதல் மெல்லினம் வல்லினமாதல் என்னும் திரிபாக்க முறையால் வருவது. கருப்பம்புல் என்பது பொது வகையில் கரும்பைக் குறியாமல் விதைக் கரும்பைக் குறிப்பதாக எறையூர் (இறையூர்) வட்டார வழக்கில் உள்ளது.

கருமத்த மாடு:

இருமை > எருமை; இருமையாவது கருமை. ஈவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர், எர், கர் என்னும் வேரடிச் சொற்கள் கருமைப் பொருளில் வருவனவே.

கரைசோறு:

மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும். கரைத்துக் குடிக்கும் கஞ்சி கரைகஞ்சி என்பது முகவை வழக்கு. கரைத்தல் = கூழாக்குதல். கரைப்பெண்டு:

சிலதொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப் பட்டு வந்தன. அவற்றுள் கரை காவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை முறையால் வரும் அத்தொழில் போல் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப் பட்டிருக்கலாம். இது திருவில்லிப்புத்தூர் வட்டாரவழக்கு. ‘கரப்பெண்' என்பது காண்க.

கல்மழை:

மழைநீர் மிகு குளிர்ச்சியால் கல்லாகிப் பொழிவதை, ஆலங்கட்டிமழை என்பர். ஆலம் என்பது நீர்.பனிக்கட்டி என்பது