254
கறுப்பு:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
-
கறுப்பு என்பது வெறுப்பு. கடுஞ்சினம் என்னும் பொருளில் வரும் சொல். கறுப்பு சிவப்பும் வெகுளிப் பொருள என்பது தொல்காப்பியம். சாராயம் என்பது மதி மருள - இருள ச் செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது. கள் என்பது கருநிறப் பொருளில் வந்ததையும் அறிக.
கன்றுத் தோட்டம்:
'நர்சரி' எனப் பல இட இடங்களில் பூச்செடி, பழச்செடி ஆ கியவை உண்டாக்கி விற்கப்படுகின்றன. ஏலத்தோட்ட வழக்காக ஏலப் பயிர் உண்டாக்கும் இடத்தைக் கன்றுத் தோட்டம் என்று வழங்குகின்றனர்.
கன்னக் கிடாரி:
கிடாரி ாரி என்பது மாட்டில் பெண்; பசு, எருமை ஆகிய வற்றின் பெண்பால் கிடாரி எனப்படும். ஆண்பால் ‘கடா’ எனப்படும். உறங்கியவன் கன்று கடாக் கன்று என்பது பழமொழி. பசு எருமை வளர்த்துப் பால் விற்பவர் கன்று போட்டுப் பெருகுதலைக் கருதுவார். ஆனால் உரிய பருவம் வந்தும் ஈனாக்கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது. கன்னிக் கிடாரி ஈனும். ஆனால் கன்னக் கிடாரி ஈனாதது. ஈனா வாழை என்பது போன்றது. கன்னல்:
காலம் காட்டும் கருவிப் பெயராகவும் காலப் பெயராகவும் கன்னல் என்பது முன்னரே வழக்கில் இருந்தது. அக் கன்னல் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது. அது, மற்றைப் பெருவிழாக்களைப் போல் திங்கள், கிழமை, நாள் என்னும் அளவு பெறாமல் சிற்றளவுப் பொழுதில் நிகழும் விழாவுக்கு ஏற்பட்டு அதன் பின்னர்ச் சிறுவிழாப் பொருளில் ஆட்சி பெற்றிருக்கும்.
கன்னியாப் பெண்:
கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு பேச்சில் வழங்கு கின்றது. என்றும் மகப்பேறு அடையாத
கன்னியாகவே
இருப்பவள். அவள் பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு வடமதுரை வட்டார வழக்காகும்.