கனைத்தான்:
வட்டார வழக்குச் சொல் அகராதி
255
க கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். செய்யார். “உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்பர். ஆனால், எதுவும் செய்யார் அத்தகைய சொல்வீரனைக் கனைத்தான் போ! நெல்லை வழக்கு.
காக்கல்:
66
ர
எனல்
குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு ஆகும். காங்கை:
கங்கு என்பது தீ எரிந்து சூடுள்ள கட்டைத் துண்டு ஆகும். தீக்கங்கு என்பர். கங்கு > காங்கு ஆகிக் காங்கையும் ஆகி அவ் வெப்பப் பொருளில் “காங்கை போதாது துணி தேய்ப்பதற்கு” என்று வழங்குதல் சலவைத் தொழிலர் வழக்கமாகும்.
காசலை:
காசலை = அக்கறை.
இன்றைக்கு என்னவோ காசலையா வந்து பேசுகிறான்; நேற்றெல்லாம் கண் தெரியவில்லை" என்பதில் புதிதாக வந்த அக்கறை புலப்படும். இது முகவை, மதுரை, நெல்லை வழக்கு. காசின்மேல் உள்ள பற்றால் அலையாக அலைந்து தேடுவது போன்ற அக்கறை இதுவாம். காண்டு:
நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு என்பது மதுரை வட்டார வழக்காகும். காண்டு போலக் 'காந்தி’ என்பதும் (வயிறு எரிபவன், கண்ணெரிபவன், எரிச்சல்காரன்) வழக்கே.
காணக்காடு:
சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு. அதனைக் காணாமல் தப்ப எவருக்கும் முடியாது. அனைவரும் கண்டேயாக வேண்டிய காடு, சுடுகாடு அல்லது இடுகாடு (புதைகாடு) ஆதலால் காணக் காடு என்பது மெய்யியல் வழக்காக உள்ளது. கட்டைச் செலவு முதலியவற்றுக்குக் காசு (காணம்) வழங்குதலால் காணக்காடு ஆகும் என்பதனினும் இப் பொருளே சிறப்பினதாகும்.