உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

259

உருள் என்றும் வட்டார வழக்காகக் கூறுவர். குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்கு கின்றது.

கால்கட்டு:

வீட்டில் தங்காமல் அலைந்து திரிபவனையும், கட்டுப்பாடு இல்லாமல் பொறுப்பற்று இருப்பவனையும் உனக்குக் கால் கட்டுப் போட்டால்தான் சரியாகும் என்பது தென்னக வழக்கு. காலில் போடும் கட்டு, கால்கட்டு அன்று. ஒரு பெண் கழுத்தில் தாலிகட்டவைத்து விட்டால், காலில் கட்டுப்போட்டது போல் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக் கொள்வான் என்பதாம். கால்கட்டு திருமணம்.

=

கால் குத்தல்:

லில்

திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால் குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கட சென்றவர்கள் ஆங்கிருந்து திரும்பிக் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் ஆதலால், வருதல் என்னும் பொருள் தருவதாயிற்று.

காலி:

காலால் நடந்து செல்லும் பசு முதலியவற்றைக் காலி என்பது பொதுவழக்கு. கன்றுடன் கூடிய பசு, கன்று காலி எனப்படும். காலி என்பது இல்லை என்னும் பொருளில் வழங்குதலும் பெறும். வீடு காலி; கடை காலி; தட்டம் காலி என்பர். இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது. ஆனால், அவற்றில் உள்ளவை இல்லை என்பது இல்லை. காற்று(கால்) உள்ளது வேறொன்றும் இல்லை என்பது பொருளாம். அறிவியல் திறம் வாய்ந்த சொல்லாம்.

காவடி:

து

காவுதடி = காவடி; காவுகின்ற (தாங்குகின்ற) அடி யுடைய தாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர் வழக்கில் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது. காவடி தாங்குவது போல் சமமான அளவில் ஊடு ஆணி ஒன்று மையமாக அமையத் தாங்கும் கோல் நுகக்கோல் என்பது எண்ணத் தக்கது. நுகத்தில் பகல் (நடு) ஆணி அன்னான் தஞ்சைவாணன்" என்பது தஞ்சைவாணன் கோவை.

66