உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

காவணம்:

இளங்குமரனார் தமிழ்வளம்

1

பந்தல் என்பது பொதுச்சொல்.

பொலிவுறுத்துதல்,

தொங்கல் ஒப்பனை அற்றது. ஆனால் காவணம் பொலி வுற்றது. தொங்கல் ஒப்பனை உற்றது. காவணம் என்பது திரு மண மேடை குறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு. வ மணப்பந்தல் என்பது வெளிப்பட மங்கல விழா நிகழிடம் காட்டும். பந்தல் அவ்வாறு காட்டாது தண்ணீர்ப்பந்தல், கொடிப்பந்தல் என்பனவும் உண்டு. காவுதல்:

“காவினேம் கலமே” என்பது புறநானூறு.

ஔவையார்

சொல் காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது. காவட்டு, காவடி, காவி என்பவை தாங்குதல் பொருள் உடையவை. பிறர் துயர் தாங்குதல் அடையாளச் சான்றாகக் கொண்ட காவி, எண்ணம் இலாரால் வண்ண அளவில் பொருள் அமைந்து விட்டது. எண்ணத்தொடு கூடிய வண்ணம் 'தவமும்

தவமுடையார்க்கு ஆகும்” என்று பாராட்டப்படும். காளாஞ்சி:

66

வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. காளாஞ்சி ஏந்துவார்' என்பது ஒரு பணிவிடை டயர். காளாஞ்சி என்பதற்குத் 'தளுகை என்பது நெல்லை மாவட்ட வழக்கு. காளம் என்பது கருமை, காகம் என்னும் பொருளது. காகளம் என்பதும் அது. காக்கைக்கு முதற்கண் தெய்வப் படையலாக உணவைப் படைத்து வழங்கும் வழக்கத்தால் தளுகைப் பொருள் ஏற்பட்டிருக்கும் கோயில் திருப்பொருள் தளுகை ஆகும். தளி = கோயில்; தளிகை (தளுகை) கோயில் உணவு. கல் தளி, மண் தளி; கோயில் கட்ட டம் கல்லால் ஆயதும், மண்ணால் ஆயதும் பற்றியது.

கான்:

ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக் கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு ஆகும். காண்டு என்பது கொடிக்கால் இடை வெளிப் பெயராக இருப்பதை அறியலாம்.

கால் என்பது வாய்க்கால். இரண்டு வரிசைக்கும் இடையே உள்ள “கால்’ 'கான்' ஆகும். பால் மொழி, பான் மொழி