உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம்

1

ஒடுக்க நோய்க்கும் பெயர். குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது. குச்சு அரி, குச்சரி. குச்சு=சிறியது; அரி = அரிசி. குச்சு வீடு என்பது காண்பது. ‘குச்சுக்காரி' என்பதும் கேட்பது.

குச்சரி.குச்சு

குச்சிக் காலி:

சு

குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் பெயராகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. குச்சி(தடி)யைக் கொண்டு சுற்றி வருவதால் அவர் பெற்ற வட்டார வழக்குச் சொல் இது. தடியான காவல்காரர் இதனைக் கேட்டு நகைப்பார். தடியுடைய காவல்காரர் கேட்டால் பகைப்பார்.

குசல்:

குசல் என்பது கோள் என்னும் பொருளில் வழங்கும் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் ‘குசலம்' என்பது திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்கு. என்ன குசலம் பேசுகிறீர்கள் என்பர். குசலம் என்பது செய்தி என்னும் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு.

குஞ்சாலம்:

குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திரு. நயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. குஞ்சம் ஆடுதல் பொருள் அமைந்த ஊஞ்சலைக் குறிப்பதாயிற்று. அஞ்சல குஞ்சலம் என்பது தமிழ்நாட்டு விளையாட்டுகளில் ஒன்று. குஞ்சப்பா:

குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக் குஞ்சிப்பல் என்பதும் உண்டு. இவை யாழ்ப்பாண வழக்காகும். குஞ்சப்பா குஞ்சியப்பா எனவும் வழங்கும். குட்டம்:

நிலைக்கால் ஊன்றுதற்குரிய பள்ளத்தைக் குட்டம் என்பது கொற்றர் வழக்கம். கொற்றர் கொத்தர். குட்டம் =