உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

சிறு,பள்ளம்; குளம் குட்டை

265

இணைச்சொல் நீர்நிலைக் குட்டம்

(ஆழநீர்) பழமையான ஆட்சியுடையது.

குட்டை:

குட்ட குட் யானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய ய இப் பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப் பின்னலுடை ய சிறு பெட்டி என்பன எண்ணலாம். கொட்டு மண்வெட்டி, தேய்ந்த சிறு மண்வெட்டி. குடல் காய்ச்சல்:

இது து நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல். 'டைபாய்டு' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது. இதனை பாவாணர் வழக்கில் கொண்டு வந்து பொதுமைப்படுத்தினார். வட்டார வழக்குச் சொற்களைப் பொதுப்பயன்படுத்தமாக ஆக்கும்போது அது மொழிவளம் ஆகின்றது.

குடுமை:

சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு அலைக்கழிக்க வாய்ப்பது கூந்தல் ஆகும். கூந்தல் பெண்களுக்குரியது. ஆண்கள் குடுமிக்குரியர் குடுமி பொதுமை குறித்து வருவதுடன் மதில் முதலியவற்றின் உச்சியும் குடுமியாகக் கூறப்படும். குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்பது ஒரு புறத்துறை. குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. குடுவை:

குறுகிய வாயையுடை யையுடைய கலம் குடுன ய கலம் குடுவை எனப்படும். குடுவை என்பது வயிறு என்னும் பொருளில் கன்னியா குமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது. குறுகிய குடல் வழியாகப் பெருங்குடல் வயிறு என உணவு செல்வதால் குடுவைப் பொருள் கொள்ள வாய்த்துள்ளது. வைப்புழி (வைக்கும் இடம்) என்றும் வள்ளுவத்தை எண்ணலாம். இனி, குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம்.