உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

குடை:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

குடை என்பது கைக்குடை, தாழங்குடை, ஓலைக் குடை எனப் பழமை தொட்டுப் புதுமை வாய்ந்தது. பதனீர் குடிக்கும் மடலும், ஊன் கொண்டு செல்லும் மடலும் குடையெனலும் பழமை வழக்கே. மலையைக் குடையாகப் பிடித்த தொன்ம (புராண)ச் செய்தியும் உண்டு. மலையில் குடைந்து படுக்கை (பள்ளி) அமைத்த குடைவரைகள் தமிழகத்தில் காணக்கூடியது. இக்குடை, உள்ளே தோண்டுதல் பொருளது. நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது.

குடை வண்டி:

மலையாள

மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்னக வழக்கு. பரியதொந்தியுடையவர்களைக் குடை வண்டி என்பது கல்குளம் வட்டார வழக்காகும். வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு.

குடை வரை:

குடை வரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது. தொல்பழ வாழ்வுக் குறிப்பினது அது.

குத்தடி:

சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி என வழங்கப்படு கின்றது. குத்தப்பட்ட அடிநேராக இருந்தால் அன்றி, அதில் ஊன்றப்படுவதும் நேராக இராது. ஆதலால் இப்பொருள் கொண்டது. தானம் = இடம். குத்தானம் நேர். இது கொத்தர் வழக்கு.

குதம்பி:

சேவு ஓமப்பொடி ஆயவை தேய்க்கும் கரண்டியைக் கண் கரண்டி ண்டி என்பது பொது வழக்கு. அக்கரண்டியில் மாவை வைத்துக் குதப்புவதுபோல் இங்கும் அங்கும் தேய்த்து எண்ணெய் காயும் எரிசட்டியில் விடுவதால் அக் கரண்டிக்குக் குதம்பி என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும்.