உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

299

வண்ணம் கொள்ளும். மஞ்சள் வண்ண ஓலை சாரோலை. ஓ ல வெள்ளை வண்ண ஓலை குருத்தோலை. சாரோலைக் கண்டு குருத்தோலை சிரித்ததாம் என்பது பழமொழி. திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் 'சார்த்து' என்பது திருமண உறுதி எழுதும் ஓலையைக் குறித்து வழங்குகின்றது. குருத்தோலை தலைநிமிர்ந்திருத்தலும், சாரோலை சரிந்து சாய்ந்து தாழ்தலும் கண்டறிக. அறிந்தால் மேற்சுட்டிய பழமொழி விளக்கமாம். சாரங்கம்:

மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர். அதுபோல் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும். வெதுப்பான உட்புறம் சுரங்கம் (சுர் அங்கம்) எனப்படுவது போலச் சாரங்கம் (சார் அங்கம்) எனப்பட்டது. அங்கு >அங்கம் = அங்கவியல். திருக்குறளில் ஓரியல். அங்கம் = உறுப்பு, உடல்.

சால்:

நீர் வைக்கும் பெருங்கலமும், நீர் இறைக்கும் பெருங் கூனையும் சால் எனப்படும். சால் போல் பெரியதாகவும் தவசம் போட்டு வைப்பதற்கு உரியதாகவும் உள்ள குதிரைச் சால் என்பது பழனி வட்டார வழக்கு.

சாலகம்:

66

சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்' எனப்படும். நீர்ப்பிறை பழமையானது என்பது அங்கணத்துள் உக்க உக்க அமிழ்து என்னும் திருக்குறளால் வெளிப்படும். ஊர் வடிகால், 'ஊரங்கண நீர்' என்று நாலடியாரில் கூறப்படும்.

சாலாணிமாறு:

நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. கூட்டுமாறு, விளக்குமாறு, பெருக்குமாறு என்பவற்றில் உள்ளது போன்றது. மாறு கொண்டு (வைக்கோல், வளார், கொடி) செய்யப்பட்டவை மாறு ஆகும். ஆணி = தாங்குதல். தாங்கிப்பிடி என்பதை ஆணிப் பிடி எனல் நெல்லை வழக்கு.