உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

சாலி:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர். 'சால' என்னும் உரிச்சொல் வழியாகப் பெற்றபெயர். நெல்லின் கூர் நுனை கிழிக்கவல்ல கூர்மை பெற்றது. முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன.

“சால உறு தவ நனி கூர் கழி மிகல்"

என்பது நன்னூல்.

சாவட்டை:

பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு. சாக அடிக்கப்பட்டது, சாகடிக்கப்பட்ட நோய் உடையது என்னும் பொருளில் வழங்கு கின்றது. அட்டை என்பது சொல்லீறு. எ-டு; சப் பட்டை, சில்லட்டை பதர், பதடி என்பவற்றை எண்ணலாம். சாவி என்பது செத்துப் போனது என்னும் பொருளில் வழங்குவது பொது வழக்கு. சாற்றமுது:

சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு. அவ் வழிபாடுடையார் குடிவழக்குமாம். அமுது என்பது பாலமுது, கண்ணமுது எனப் பொதுமை குறித்து வரும்.

சாறு:

சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல். அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித் தரும் பாட்டு ‘சாற்றுக் கவி' எனப்பட்டது. சாத்துக் கவி, சார்த்துக் கவி என்பவை பிழை வழக்கு. இனிச் சாறு என்பது விடுகறியாக மிளகுசாறு, புளிச்சாறு, பருப்புச் சாறு என வரும். ஆனால் சாறு என்பது எண்ணெய் என்னும் பொருளில் உசிலம் பட்டி வட்டாரத்தில் வழங்குகின்றது. எள், கடலை, தேங்காய் முதலியவற்றின் ‘சாறு’ என்பது கொண்ட வழக்கம் அது. சிக்கடி:

சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்கு