உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

செறு:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

66

செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள் செறு என வழங்கினர். அது ஒரு குறித்த நில அளவையும் ஆயது. நூறு செறு” என்பது புறநானூறு. சறுவாய்" என்னும் என்னும் பெயரொடு ஊர்கள் உள்ளமை தொழுதூர், திட்டக்குடி வட்டாரங்களில் காணலாம். சேக்காய்:

66

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. குழந்தையை விரும்பி அரவணைத்து அது விரும்புவதைத் தந்து வந்தால் எந்தப் பிள்ளையும் உறவாகிவிடும். வெள்ளை நிறத்தில் எந்த நிறமும் படிவது போல் பிள்ளை மனமும் விரும்புபவர் மேல் படியும். அதனால் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள்.

சேக்காளி:

சேர்ந்து பேசிப் பழகி இருப்பவன் சேக்காளி என்பது பொது வழக்கு. நட்பு உடையவர் என்பது பொருள். சேர்க்கை, சேர்ப்பு என்பவற்றில் உள்ளதுபோல் சேர்க்காளி, சேர்த்தாளி என்பது ரகர ஒற்று இல்லாமல் உள்ளது. இது தென்னக வழக்காகும்.

சேந்தி:

தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது புரையில் அதனை அள்ளியெடுத்தற்கென வைக்கப்பட்ட வழிக்குச் சேந்தி என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சேந்துதல் = அள்ளுதல்; நீர் முகத்தல் சில இடங்களில் நீர் சேந்துதல் என வழங்கும். சேப்பான்:

சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன் சேர்த்து மெல்ல, வாய் சிவப்பேறும். சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும். வெற்றிலை பாக்குப் போடுதல் என்றாலே சுண்ணாம்பும் சேர்ந்ததே.